For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் 37 மாடி ‘வாக்கி டாக்கி’ கட்டிடம்!

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு பெரும் இடையூறு செய்வதால் என்று கூறுகிறார்கள்.

ஆளாளுக்கு ஒரு பிரச்சினை என்பது போல், நம்மூரில் உயரமான பிளாட்களைக் கட்டி வீட்டிற்குள் சூரிய ஒளி பரவ விட மாட்டேன் என்கிறார்கள் என்றால், லண்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தால் அதிக சூரிய ஒளி தாக்குகிறது எனப் புலம்புகிறார்கள் மக்கள்.

இதையடுத்து எங்கு தவறு நடந்தது என்று கட்டுமான குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கி டாக்கி....

வாக்கி டாக்கி....

இந்த 37 மாடிக் கட்டடத்திற்கு வாக்கி டாக்கி என்று பெயர் வைத்துள்ளனர். காரணம், வாக்கி டாக்கி போல இது லேசாக வளைந்து காணப்படுவதால் தான்.

கண்ணாடியால் பாதிப்பு...

கண்ணாடியால் பாதிப்பு...

இந்த கட்டடத்திற்குப் பின்னால் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் இந்த கட்டடத்தின் கண்ணாடிகளால் தாங்கள் பல பாதிப்புகளை சந்திப்பதாக புகார் கூறுகிறார்கள்.

சூரிய ஒளியில் உருகும் பொருட்கள்...

சூரிய ஒளியில் உருகும் பொருட்கள்...

ஒரு ஜாகுவார் காரின் கண்ணாடி, பேனல்கள் உள்ளிட்டவை இந்த கட்டட வெளிச்சப் பிரதிபலிப்பு பட்டு உருகிப் போய் விட்டதாம். நேரடியாக சூரிய ஒளியை இக்கட்டடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் கீழே பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

மினி சூரியன்...

மினி சூரியன்...

அதிக அளவில் இந்த கண்ணாடிகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் கிட்டத்தட்ட மினி சூரியனைப் போல உஷ்ணம் ஏற்பட்டு இந்த பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எரியும் கார்பெட்டுகள்....

எரியும் கார்பெட்டுகள்....

மேலும் ஒரு நிறுவனத்தின் பெயிண்டிங்கையே இது உருக்கி விட்டதாம். மேலும் கார்பெட்களும் எரிந்து போய் விட்டனவாம்.

ஆம்லேட் போட்டு....

ஆம்லேட் போட்டு....

இந்த கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் எந்த அளவுக்கு சூடான ஒளியைப் பிரதிபலிக்கின்றன என்பதை விளக்குவதற்காக ஒரு டிவி குழுவினர் அந்தக் கட்டடத்திற்கு எதிரே அந்த வெளிச்சத்தில் வைத்து முட்டையை ஆம்லேட் போட்டு செயல் விளக்கம் காட்டியதை பலரும் கூடி வேடிக்கை பார்த்தனர்.

மூடப்பட்ட கார் பார்க்கிங்குகள்....

மூடப்பட்ட கார் பார்க்கிங்குகள்....

இந்த வெளிச்சப் பிரதிபலிப்பு பிரச்சினை காரணமாக இந்தக் கட்டடத்திற்கு எதிரே உள்ள மூன்று கார் பார்க்கிங்குகளை தற்போது மூடி விட்டனராம். பல கார்களுக்குப் பாதிப்பு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரிய வலை...

சூரிய வலை...

இந்தக் கட்டடத்திற்கு வாக்கி டாக்கி என்ற பெயர் பொருத்தமல்ல, மாறாக சூரிய வலை என்றுதான் பெயரிட வேண்டும் என்று சிலர் கோபத்துடன் கூறுகின்றனர்.

நஷ்ட ஈடு....

நஷ்ட ஈடு....

இந்த கட்டட வெளிச்சப் பிரதிபலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தரப்பட்டுள்ளதாக லண்டன் மாநகராட்சி செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கட்டட கட்டுமானக் குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குவியும் புகார்கள்...

குவியும் புகார்கள்...

எனினும், இந்த சூரிய வெளிச்சம் பட்டு சாலையில் நிறுத்தப்பட்டுள்ள பல கார்களில் மேற்கூரை, முன்பகுதி உள்ளிட்டவை உருகிப் போய் விட்டதாம். இதனால் தொடர்ந்து பலர் இந்தக் கட்டடம் குறித்து புகார்களைக் குவித்து வருகின்றனர்.

English summary
The 37-storey skyscraper at 20 Fenchurch Street, which is still under construction in the City of London on September 3, 2013. Developers for an unfinished skyscraper in central London say they are investigating the way the building reflects bright sunlight after claims that the intense glare melted parts of a car parked nearby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X