For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறீர்கள்?: கேரள கோவில்களிடம் கேட்டுள்ள ரிசர்வ் வங்கி

By Siva
Google Oneindia Tamil News

Kerala temples asked to give details of gold they have
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கோவில் தேவஸ்தானங்கள் தங்களிடம் எவ்வளவு தங்கம் வைத்துள்ளன என்பதை கேட்டு மத்திய ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து குருவாயூர் கோவில் தேவஸ்தான உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தங்கம் இருப்பு குறித்து கேட்டு மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை நான் கோவில் நிர்வாகக் குழுவிடம் அளித்துள்ளேன். ஏனென்றால் அவர்கள் தான் பாலிசிகள் குறித்த முடிவுகளை எடுப்பார்கள் என்றார்.

கேரளாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் 5 தேவஸ்தானங்களின் கீழ் உள்ளது. அதில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தான் மிகப் பெரியது. இந்த தேவஸ்தானத்தின் கீழ் தான் சபரிமலை கோவில் உள்ளது.

தேவஸ்தானங்களுக்கு கடிதம் அனுப்பியதை ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குனர் சலிம் கங்காதரன் உறுதிபடுத்தியுள்ளார். தங்கம் வாங்கும் திட்டம் எதுவும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை. இது வழக்கமான நடவடிக்கை தான் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள், பொருட்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Temple boards in Kerala have received a letter from the Reserve Bank of India (RBI) seeking details of the stock of gold in their possession, a temple board official said Thursday. Speaking to reporters, a top official of the famous Guruvayoor Devasom Board said a letter had been received from the RBI seeking details of gold stocks it holds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X