For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கற்பழிப்பில் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நம் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் கடந்த ஆண்டு அதிகமான பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அது நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்த நிலையில் உள்ளன என்பதை பார்ப்போம்.

கற்பழிப்பு

கற்பழிப்பு

கடந்த ஆண்டு நம் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிகமாக 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் 2,049 கற்பழிப்புகளுடன் ராஜஸ்தான் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

கடந்த ஆண்டு அஸ்ஸாமில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடந்துள்ளதாம்.

14-18 வயது

14-18 வயது

கற்பழிக்கப்படும் பெண்களில் பலர் 14 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.

தெரிந்தவர்கள் தான்

தெரிந்தவர்கள் தான்

பெரும்பாலும் தெரிந்தவர்களால் தான் பெண்கள் கற்பழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரர், நண்பர்கள், உறவினர்கள், தந்தை ஆகியோரால் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்.

பெங்களூரில் மட்டும்

பெங்களூரில் மட்டும்

பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் மட்டும் பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, மும்பை

டெல்லி, மும்பை

இந்தியாவின் இரண்டு பெரிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் அதிக அளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. டெல்லியில் 585 பெண்களும், மும்பையில் 232 பேரும், சென்னையில் 94 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

English summary
According to the data provided by the National Crime Records Bureau, Madhya Pradesh has the highest number of rapes in India in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X