உயிருக்கு போராடும் கடலூர் சிறுவன் ஹரீஷ்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்
கடலூரை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன் ப்ளீஸ்!
கடலூரை சேர்ந்த கவுரி மற்றும் ஆறுமுகம் தம்பதியின் மகன் ஹரீஷ். இவர்களைப் பார்க்கும் அனைவருக்கும் நொடிப்பொழுதில் இந்தக் குடும்பத்தினரின் வலியும் ஏழ்மையும் புரிந்துவிடும். மற்ற குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக ஓடி விளையாடி கொண்டிக்கும் நேரத்தில் எட்டு வயதாகும் ஹரீஷ் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஹரீஷுக்கு மூன்று வயதில் மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட தொடங்கியது. தங்கள் மகனின் பிச்னையை சரி செய்ய ஆறுமுகம் - கவுரி செல்லாத மருத்துவமனைகள் இல்லை. கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்றுள்ளனர்.
அப்போது தான் ஹரீசுக்கு தீவிர இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், எந்த மருத்துவமனையும் அவருக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்ய முன்வரவில்லை.
சமீபத்தில்தான், தெரிந்தவர் ஒருவர் ஹரீஷை மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுபடி அறிவுரை அளித்துள்ளார். உடனடியாக ஆறுமுகம்-கவுரி தம்பதி தங்கள் எட்டு வயதுக் குழந்தை ஹரீஷை மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

CCTGA/Severe form of Ebstein's Malformation of left AV Valve, Severe AV Valve regurgitation என மிகக் கொடிய இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹரீஷுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என மியாட் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை மூலம் Ebsteinoid Left AV Valve, Repair of Mitral Valve ஆகியவற்றை ஹரீஷுக்கு மேற்கொள்ள வேண்டும். ஹூரீஷின் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ளதால் அவருக்கு உடனடியாக இந்த ஆப்ரேசனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சுமார் ரூபாய் 4,60,000 அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

கடலூரில் சாதாரண வேன் டிரைவராக உள்ள ஆறுமுகத்திடம் இவ்வளவு பெரிய தொகை இல்லை. தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரீஷை நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம். எட்டு வயதுக் குழந்தை ஹரீஷை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்களேன் ப்ளீஸ்!
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications