முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்
Recommended Video

அபுதாபி: அபுதாபியில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ளார்.
மொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.

இந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக அளித்துவிட்டார்.
தாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications