குரங்கு அம்மை குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.. கண்பார்வை பாதிக்கலாம்: மருத்துவ நிபுணர்
ஜெனிவா: கேரள நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று பரவலில் இருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில், நான் கொரோனா 2.0 என்பது போல தற்போது குரங்கு அம்மை (Monkeypox) எனும் வைரஸ் நோய் உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு நோயான குரங்கு அம்மை, மனிதர்களை தாக்கினால், வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ, இல்லாதவர்களுக்கோ இந்நோயினால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

என்னென்ன அறிகுறிகள்
காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் உள்ளிட்டவையே குரங்கு அம்மை பாதித்ததற்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை நுழையாமல் இருந்தது.

கேரளா நபருக்கு குரங்கு அம்மை
இந்த நிலையில், நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேராளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த அந்த நபருக்கு முதலில் குரங்கு அம்மை அறிகுறி இருந்தது. தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதியானது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் நுழைந்ததுமே மத்திய அரசு, மாநில அரசுகளை உஷார் படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக கேரளாவுக்கு நிபுணர் குழுவையும் அனுப்பி வைத்துள்ளது. கேரள மாநிலமும், நோய் பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறது.

குழந்தைகளுக்கு ஆபத்தா?
கொரோனா பீதியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மேலும் அச்சமடைந்துள்ளனர். எனினும் இந்த நோயின் தீவிரம் குறைவானது தான் என்றும், கோரோனா போல இல்லை என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ நிபுணர் பியூஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த நோய் தாக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது ஆபத்தானது. சின்னம்மை, பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு போன்ற கொப்புளங்களே குரங்கு அம்மை பாதித்தவர்களுக்கும் ஏற்படும். குரங்கு அம்மை பாதித்த நபர்களுக்கு உடலில் கொப்புளங்களும், காய்ச்சலும் ஏற்படும். விழித்திரையில் கொப்புளங்கள் ஏற்பட்டால் கண்பார்வை கூட பாதிக்கப்படலாம'' என்றார்.

இந்தியாவுக்கு எச்சரிக்கை
அதேபோல், உலக சுகாதார அமைப்பின்(WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கதேட்ரபால் சிங், குரங்கு அம்மை பாதிப்பு குறித்து இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "குரங்கு அம்மை தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவானது என்றாலும், இது குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனால், குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்திய பிறகே பிறருக்கு பரவும். எனவே, கொரோனா போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அதி வேகமாக பரவாது. குரங்கு அம்மை பரவலை தடுக்க கூட்டுக் கவனமும் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் தேவை" என்றார்.
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications