ஜெயங்கொண்டத்தில் "பயங்கரம்".. காளான் பறிக்க சென்ற 2 பெண்கள் வெட்டிக்கொலை! சிதைந்து கிடந்த முகங்கள்
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே காளான் பறிக்கச் சென்ற இரண்டு பெண்களை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமம் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் தைல மரக்காடு அமைந்து இருக்கிறது. இங்கு மழை காரணமாக காளான்கள் அதிகளவில் வளர்ந்து இருந்தன.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மனைவி கண்ணகி (வயது 50) மற்றும் கலைமணி என்பவரது மனைவி மலர்விழி (வயது 29) ஆகியோர் நேற்று காலை காளான் பறிக்கச் சென்றனர்.

தைலமரக் காட்டில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் காளான்களை பறிக்க சைக்கிளில் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தினர் ஊர் முழுவதும், தைல மரக் காட்டிலும் தேடி அலைந்து உள்ளனர்.
அப்போது அவர்கள் பெரியபாளையத்தில் இருந்து கழுவதொண்டி செல்லும் சாலையில் இருவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே
காளான் பறிக்க சென்றது தெரியவந்தது. சைக்கிள் கிடைக்கும் இடத்திலிருந்து பாதை வழியாக உள்ளே சென்று பார்த்த போது 2 பெண்களின் உடல்களும் முகங்கள் சிதைக்கப்பட்டு அறிவாளால் வெட்டப்பட்டு கிடந்தன.
இது தொடர்பாக ஊர் மக்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பெண்கள் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications