அன்றே கணித்த தலைவர் வடிவேல்... 10 ஆம் வகுப்பு மாணவனை மணமுடித்த ஆசிரியை..!
அரியலூர்: அரியலூர் அருகே ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் வடிவேலு காமெடி போல பத்தாம் வகுப்பு மாணவனை காதலித்து திருமணம் செய்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தளபதி விஜய், அஜித் ஆகியோர் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. படம் வெற்றி பெற்றதோ இல்லையோ அந்த படத்தில் வரும் வடிவேலு காமெடி மிகவும் பிரபலமானது. பள்ளியில் நீண்ட நாட்களாக பெயிலாகி பெயிலாகி படிக்கும் மாணவனான வடிவேலு பள்ளிக்கு வரும் ஆசிரியையை காதலிப்பதாகவும் பின்னர் அந்த ஆசிரியை பள்ளி செல்லும்போது வடிவேலு பாஸ் ஆனால் திருமணம் செய்து கொள்வதாக கூறி இருப்பார். இந்த காட்சி தற்போது வரையும் ஆல்டைம் பேவரைட் ஆக இருக்கிறது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதையும் தாண்டி பள்ளி மாணவனை காதலித்து திருமணம் செய்வதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஆசிரியை ஒருவர். என்ன நடந்தது என விசாரித்தபோதுதான் 90ஸ் கிட்ஸ்கள் பொறாமைப்படும் அளவுக்கு கடும் அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்தது..

மாணவனுடன் காதல்
அரியலூர் மாவட்டம் மழவராய நல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான சிறுவன் ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பெயில் ஆன நிலையில் தற்போது 17 வயதில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுவன் படிக்கும் பள்ளிக்கு அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயிற்சி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார். அவ்வப்போது மாணவன் படிக்கும் வகுப்பில் மாற்று வகுப்புகள் வகுப்புகள் நடத்தி வந்த ஆசிரியைக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டவுட் கேட்க வேண்டும் என செல்போன் எண்ணை வாங்கிய மாணவன் ஆசிரியைக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்ப இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மெசேஜ் அனுப்பும் பழக்கம் ஒரு கட்டத்தில் அதிகமாகி ஆசிரியை முதலில் தன் காதலை சொல்ல அவனும் ஒத்துக் கொள்ள இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து கொள்வதாக கூறி இருக்கின்றனர்.

மாணவனுடன் திருமணம்
மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் இது குறித்து விசாரித்தபோது மாணவன் தனது ஆசிரியையுடனான காதல் குறித்து கூறியுள்ளார் இதனால் கடுப்பான பெற்றோர் மாணவனை கண்டித்துள்ளனர். அவனது பெற்றோர் ஆசிரியையும் திட்டியதால் பிரச்சினை பூதாகரமாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் அருகே மூங்கில் பாடி கிராமத்துக்குச் சென்ற மாணவனும் ஆசிரியையும் உறவினர் ஒருவரின் உதவியோடு அங்குள்ள கோயிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

ஜோடியாக தற்கொலை முயற்சி
திருமண விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது பிரச்சனை. தங்களது காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் வேறுவழியின்றி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் சிறுவனையும் ஆசிரியையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் உயிர்பிழைத்த நிலையில் ஆசிரியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆசிரியை கைது
நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பிய நிலையில் மாணவனின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குன்னம் போலீசார் விசாரணை நடத்தி தற்போது ஆசிரியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தான் அரியலூர் மாவட்டத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications