போதை படுத்தும் பாடு.. சாராயம் என நினைத்து.. சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு!
அரியலூர்: சாராயம் என நினைத்து சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில்கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் பூட்டி கிடக்கின்றன.

கள்ளச்சாராய விற்பனை
இதனால் இதனால் மதுபிரியர்களை குறி வைத்து கள்ளச் சாராய விற்பனை நடந்து வருகிறது. ஆங்காங்கே நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை போலீசார் கண்டுபிடித்து தடுத்து வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்தினாலும் சிலர் போதைக்காக எதை, எதையோ குடித்து அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர்.

அநியாயமாக உயிரிழக்கின்றனர்
இரண்டு வாரத்துக்கு முன்பு காஞ்சிபுரத்தில் போதைக்காக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கிற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேருக்கும் கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் அரியலூரில் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்த ஆட்டோ டிரைவர் இறந்துள்ளார்.

சானிடைசரை குடித்தனர்
அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். ஆட்டோ டிரைவர். மது போதைக்கு அடிமையான இளங்கோவன், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிக்க முடியாமல் விரக்தியில் புலம்பி வந்துள்ளார். எப்படியாவது போதை வேண்டும் என்று நினைத்த அவர் கடந்த 7 ஆம் தேதி சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்துள்ளார்.

பரிதாப உயிரிழப்பு
இளங்கோவனின் நண்பர்களான மோகன், சரவணன் ஆகியோரும் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்துள்ளார். குடித்த பிறகு தான் அவர்களுக்கு அது சாராயம் அல்ல; சானிடைசர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications