திமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்
அரியலூர்: திமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது மரணம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சிவசுப்பிரமணியம். இவர் 1998 2004 வரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருந்தார்.

தற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இவரது மகன் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று அவர் இயற்கை எய்தினார். இவரது மறைவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது உடல் அஞ்சலிக்காக அவரது அரியலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சிவசுப்பிரமணியம் மறைவுக்கு திமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications