தங்கம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? இஷ்டத்துக்கு விலை ஏறுதே! கையில மஞ்ச கயிறுடன் கிளம்பிய பெண்கள்
அரியலூர்: தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் 'இனி தங்கம் வாங்க முடியுமா?' என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தான் அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் தங்கம் விலை உயர்வை கண்டித்து மஞ்சள் கயிறுடன் பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு, உலக அரசியல் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உயர்ந்து வந்த நிலையில், தற்போது வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.97,600 ஆக உயர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தங்கம் விலை உயர்வு
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி ரூ.88,600 ஆகவும், நவம்பர் 13ஆம் தேதி ரூ.95,920 ஆகவும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இடையில் சில நாட்கள் விலை சற்றே குறைந்தாலும், மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்தது. டிசம்பர் 12ஆம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.98,960 ஆக உயர்ந்து, மீண்டும் ஒரு புதிய சாதனையை பதிவு செய்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த விலையிலேயே நீடித்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து சென்றது.
தங்கம் ஒரு லட்சம்
அந்த நாளில் தங்கம் ரூ.1 லட்சத்து 120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது தங்க சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறுநாள் சிறிதளவு விலை குறைந்திருந்தாலும், உயர்ந்த நிலையிலேயே தங்கம் விலை தொடர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ரூ.1,02,400ஆக விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு 10 ஆயிரம் உயர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்நிலையில் டிசம்பர் 25ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 12, 820க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிலோவிற்கு 1000 ரூபாய் உயர்ந்துள்ளது.
அரியலூர் பெண்கள் போராட்டம்
இந்நிலையில், தான் அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் தங்கம் விலை உயர்வை கண்டித்து மஞ்சள் கயிறுடன் பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் தங்கம் விலை வின்னை முட்டும் விதமாக 1 லட்சம் ரூபாய் விற்பனை செய்வதை விலை குறைப்பு செய்ய வேண்டி பெண்கள் மஞ்சள் கயிற்றை கையில் வைத்துக் கொண்டு நூதன போராட்டாத்தில் ஈடுபட்டனர்.
மஞ்சள் கயிறு போராட்டம்
தங்கத்தின் விலை உயர்வால் பெண்கள் திருமணம் செய்வது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தங்கம் வாங்கி பெண் பிள்ளைகளை திருமணம் செய்வது என்பது ஏழை மக்களுக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும் சவாலாக உள்ளது. ஆகையால் அரசு தங்கத்தின் விலையை குறைக்க வேண்டும் என கூறி மஞ்சள் கயிற்றை கையில் வைத்துக் கொண்டு கோஷங்களை எழுப்பியவரு நூதன போராட்டாத்தில் ஈடுபட்டனர். உண்மையில் இவர்கள் போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் கிளம்பியுள்ளது.
-
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
Gold Rate: ஈரான் போர் எதிரொலி! தங்கம் விலை கிடுகிடு! மாலை நல்ல செய்தி? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications