அரியலூர் டூ நாமக்கல் மக்களுக்கு ஹேப்பி! புதிய ரயில் பாதையின் மாஸ்டர் பிளான்! யோசிக்க முடியாத பலன்கள்
அரியலூர்: அரியலூர், நாமக்கல் மாவட்டத்துக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று தற்போது வந்துள்ளது.. அது என்ன தெரியுமா? இங்குள்ள புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள், இப்போது முக்கிய கட்டத்தை எட்டி விட்டதாம்.. இந்த புதிய ரயில் பாதை திட்டத்திற்கான செயல்திட்டம் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் முடிவடைந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் தொடங்கப்போவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நாமக்கல் மக்களவை தொகுதி எம்.பி. மாதேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்..

மத்திய அரசு ஹேப்பி நியூஸ்
அப்போது அமைச்சர் தன்னுடைய உரையில், "புதிய ரயில் பாதை திட்டம் மொத்தமாக 108 முதல் 116 கிலோமீட்டர் நீளத்தில் அமைய உள்ளது.. . ஏற்கனவே அரியலூர் - ஈரோடு இடையே திருச்சி, கரூர் வழியாக செல்லும் ரயில் பாதை செயல்பாட்டில் இருந்தாலும், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் பகுதிகள் நேரடி ரயில் இணைப்பு இல்லாமல் இருந்தது.
அந்த குறையை நிரப்பும் வகையில்தான் இந்த புதிய பாதை திட்டமிடப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தின் மூலமாக, அரியலூர், பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு பகுதிகள் நேரடியாக இணைக்கப்படும்... இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்..
அரியலூர், நாமக்கல்
அந்த அறிக்கை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு, அதற்கு பிறகு, மத்திய அரசின் நிதி அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டும்.. அதற்கு பிறகு நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் பரிசீலனைக்கு திட்டம் செல்லக்கூடும் என்று அமைச்சர் தன்னுடைய உரையின்போது தெரிவித்தார்.
ஒருவேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகள், பயன்கள், மாற்றங்கள் எக்கச்சக்கம் என்கிறார்கள்.. குறிப்பாக, தென்மாவட்டங்களை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரு மாற்று மற்றும் நேரடிப் பாதையாக அமையும்.
மேலும், பெரம்பலூர், நாமக்கல் போன்ற மாவட்டங்கள் போக்குவரத்து வசதிகளில் பெரும் மாற்றம் ஏற்படும்.. காரணம், இப்போதைக்கு ஈரோடு, சேலம், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால், பொதுமக்கள் பஸ்களை தான் நம்பியிருக்கிறார்கள்.. ஆனால், புதிய ரயில் பாதை வந்துவிட்டால் பயணம் ஈஸியாகி விடும்.. நேரமும் மிச்சமாகும்.. செலவும் குறையும்...
யோசிக்க முடியாத ஹிட்
மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்குமே நேரடி பயன் கிடைக்கும். அதேபோல விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைகளுக்கு வேகமாக கொண்டு செல்ல முடியும்.. இதனால் விவசாய வருமானமும் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் சுண்ணாம்பு கற்கள், சிமெண்ட் தொழில்களுக்கு ஃபேமஸ் ஆனவையாகும்.. எனவே, தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கொண்டு செல்லவும், தயாரிப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பவும் இந்த ரயில் பாதை ரொம்பவே பயன்படும்..
மக்களுக்கு பலன்கள் - நன்மைகள்
சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும்.. இந்த புதிய பாதை சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும். ஏனென்றால், திருவண்ணாமலை, கொல்லிமலை, ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் ரயிலிலேயே இனி வந்து செல்ல முடியும்.. டூரிஸ்ட்கள் வந்துவிட்டால், ஹோட்டல்கள், போக்குவரத்து சேவைகள் போன்றவை தானாகவே முளைத்துவிடும்.. இது எத்தனையோ வியாபாரங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும்..
அனைத்தையும்விட, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.. நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் அனுமதி போன்ற நடைமுறைகள் என அனைத்துமே விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாமக்கல், அரியலூர் மாவட்ட மக்களுக்கு இப்பவே மகிழ்ச்சி ஆரம்பமாகி விட்டதாம்...!!












Click it and Unblock the Notifications