8 நாட்களில் 3 பேரா?.. கர்நாடகாவில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்? மத மோதலா? காரணம் என்ன?
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கடந்த 8 நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளதால், அங்குள்ள மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக கொலை குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெல்லார் நகரில் 19 வயது முஸ்லீம் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த மாதம் 26-ந் தேதி கர்நாடகா மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணித் தலைவர் பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து அங்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நடுரோட்டில் வாலிபர் படுகொலை
இந்த கொலை சம்பம் முடிந்த சில நாட்களிலேயே மங்களூருவில் மீண்டும் ஒரு வாலிபர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், அந்த வாலிபர் சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள அந்த இடத்தில், திடீரென ஒரு கும்பலினர் வாலிபரை சரமாரியாக அரிவாள், கத்தியால் வெட்டி படுகொலை செய்கின்றனர். இந்த கொலையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சூரத்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

8 நாளில் 3 கொலைகள்
இந்தநிலையில், கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடாவில் 8 நாளில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்றது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தக்ஷின கன்னடா பகுதியில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த கொலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாகவும், பழிவாங்கும் படலத்துடனும் நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அடுத்தடுத்த கொலைகளால் கொந்தளிப்புடன் காணப்படும் தக்ஷின கன்னடா பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை 37 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திட்டமிட்டு கொலைகள்?
கைதானவர்களில் பெரும்பாலானோர் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ''முதலாவதாக நடைபெற்ற கொலை திட்டமிடப்படாத சம்பவமாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரு கொலைகளும் வகுப்புவாத கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது" என்று போலீசார் தெரிவித்தனர். பெல்லார் நகரில் புலம் பெயர்ந்த முஸ்லீம் தொழிலியான 19 வயது இளைஞர் மசூத் முதன் முதலாக கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை பிரவீன் நெட்டாரு (வயது 34) என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் பாஜகவின் இளைஞர் அணியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

37 பேர் கைது
தொழிலதிபருமான பிரவீன் நெட்டாரு மசூத் இல்லத்தில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில்தான் வசித்து வந்தார். இரு சக்கர வாகனங்களில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பிரவீன் நெட்டாருவை வெட்டிக்கொலை செய்தனர். இந்தக் கொலை நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள், முகம்மது பாசில் என்ற 23 வயது முஸ்லீம் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார். முகம்மது பாசில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பிரவீன் நெட்டாரு கொலையுடன் முகம்மது பாசில் கொலைக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.v

கண்காணிப்பில் வைத்துள்ளோம்
அடுத்தடுத்த இந்த கொலைகளுக்கான இணைப்பு புள்ளிகள் எதுவாக இருக்கும் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ''முதலில் நடந்த கொலைக்கு பிறகு இந்து இயக்கத்தின் முக்கிய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதன்பிறகு முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இருவருமே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று கொலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாகவும் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக மேலும் சில நபர்களை கண்காணிப்பில் வைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.

144 தடை உத்தரவு
முகம்மது பாசில் கொலையை தொடர்ந்து சூரத்கல் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்கும் வகையில், அங்கு சனிக்கிழமை அமைதிக் குழுக் கூட்டத்தை போலீசார் நடத்தினர். ஆனால், முஸ்லீம் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், பாஜக தலைவர்கள், பதற்றமான ஏனைய இரு இடங்களிலும் அமைதிக்குழு கூட்டம் நடத்த வேண்டும் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், முதல்வர் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசுபவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications