சிஐடி வசம் ஒப்படைப்பு.. கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொன்ற வழக்கு விசாரணை அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகவில் மான் வேட்டையாடியதாக கூறி 3 தமிழர்களை வனத்துறையினர் சுட்டு கொன்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 3 பேரையும் வனத்துறையினர் பக்கத்தில் வைத்து சுட்டு கொன்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் 3 தமிழர்களை சுட்டு கொன்ற வழக்கு விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. சுதந்திர தினமான கடந்த 15ம் தேதி இந்த சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா எனும் பகுதியின் அருகே ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக கூறி 3 பேரை வனத்துறையினர் சுட்டு கொன்றனர்.

Karnataka Shootout

விசாரணையில் அவர்கள் அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பதும், அவர்கள் தொமியார்பாளையா கிராமத்தில் வசித்து வந்ததும் தெரிவந்தது. இதில் மஹிமா தாஸ் என்பவர் தப்பினார். 3 தமிழர்களை வனத்துறையினர் சுட்டு கொன்றது பெரும் விவாதத்தை கிளப்பியது. அவர்கள் மாயமான மாட்டை தேடி வனப்பகுதிக்குள் சென்றதாகவும், ஆனால் வனத்துறையினர் மான் வேட்டையாடியதாக கூறி சுட்டு கொன்றதாகவும் பலியானவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் 3 தமிழர்களை சுட்டு கொன்ற வழக்கின் விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. இதற்கான உத்தரவை கர்நாடகா டிஜிபி எம்ஏ சலீம் பிறப்பித்தார். துப்பாக்கிச்சூடு, போராட்டம், வனத்துறை அலுவலகம் சேதம் என்று ராம்புரா, ஹனூர், கொள்ளேகால் புறநகர் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 4 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அனைத்தும் சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி இந்த வழக்குகளின் விசாரணையை சிஐடி போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

3 தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடகா பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் இறந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனத்துறையினர் ஒருவரை பக்கத்தில் வைத்து சுட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் தரப்பில் 3 பேரும் பாறையின் மேல் நின்றதாகவும், அவர்கள் தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது பதிலுக்கு சுட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஹனுர் உதவி வனப்பாதுகாவலர் மாரிசாமி கூறுகையில், ''வனவிலங்குகளை வேட்டையாட ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 8 மணிக்கு ஒரு கும்பல் வனப்பகுதிக்குள் சென்றது பற்றி தகவல் கிடைத்தது. ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில் வனத்துறையினர் சென்றபோது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. வார்னிங்கை மீறி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாதுகாப்புக்காக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த கும்பலிடம் இருந்து 2 பைகளில் 34 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில் இரந்து 75 மீட்டர் தொலைவில் மான் இறைச்சி கிடைத்தது'' என்றார்.ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதனை உறுதி செய்யவில்லை. இது விவாதத்தை ஏற்படுத்தியது. வனத்துறையினர் வேண்டுமென்றே அவர்களை கொன்றார்களா? என்ற சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+