பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் ஒரே மருத்துவக் கல்லூரியில் 33 மாணவர்களுக்கு கொரோனா.. ஓமிக்ரானா?.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு:உலக நாடுகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது.

அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்! அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!

30 முறை உருமாற்றம் அடைந்துள்ள இந்த ஓமிக்ரான் வைரஸ் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்குகிறது என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இந்தியாவுக்குள்ளும் ஓமிக்ரான் ஏற்கனவே புகுந்து விட்ட நிலையில் இதுவரை 422 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஓமிக்ரான் வைரஸ்

ஓமிக்ரான் வைரஸ்

மகாராஷ்டிராவில் 48 பாதிப்புகளும், டெல்லி- 79 பாதிப்புகளும், குஜராத்- 43, தெலுங்கானா- 41, கேரளா- 38, தமிழ்நாடு- 34, ராஜஸ்தான்- 22, மேற்கு வங்கம்- 6, ஹரியானா-4, ஒடிஷா-4, ஆந்திரா-4 என மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு பதிவாகி உள்ளது. நாட்டில் முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

33 மருத்துவ கல்லூரி மாணவர்கள்

33 மருத்துவ கல்லூரி மாணவர்கள்

கர்நாடகாவில் இதுவரை 31 ஓமிக்ரான் வைரஸ் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவின் கோலாரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சரணி தெரிவித்தார்.

ஓமிக்ரான் பாதிப்பா?

ஓமிக்ரான் பாதிப்பா?

இவர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வேகமெடுக்கும் நிலையில் கர்நாடகாவில் வருகிற 28-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஹோட்டல்களில் 50 சதவீத பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 கவலையளிக்கிறது

கவலையளிக்கிறது

10 நாட்களுக்கு மேல் தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது கர்நாடகாவின் எல்லையோர மாநிலங்களான மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், கர்நாடகாவில் தொற்று பரவல் அதிகமாகும் கவலையளிப்பதாக கர்நாடகா முதல்வர் பசுவராஜ் பொம்மை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The diagnosis of corona infection in 33 medical students at a medical college in Kolar, Karnataka is shocking. All of those students are being treated. Their samples were tested to see if they were infected with the Omicron virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X