Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் வெடிக்கும் 40% கமிஷன் சர்ச்சை.. ஒப்பந்ததாரர்களின் ஓபன் பேட்டி.. வீடியோவால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 40 சதவிகிதம் வரை கமிஷன் கேட்கப்படுவதாக ஏற்கெனவே ஒப்பந்ததாரர் சங்கத்தினர் புகார்களை எழுப்பியிருந்தனர்.

முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளனர்.

ஏற்கெனவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டுமே மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த புகார்களையொட்டி கர்நாடக மாநிலத்தில் இந்த ரெய்டுகள் மேற்கொள்ளப்படுமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேட்டி

பேட்டி

அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதற்கு ஒதுக்கப்படும் தொகைகளில் 40 சதவிகிதம் வரை கமிஷனாக கொடுக்க வேண்டும் என அமைச்சர்கள் வற்புறுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஊழலே எங்கள் ஆட்சியில் கிடையாது என்று கூறி வந்த பாஜகவுக்கு கர்நாடக மாநிலத்தில் மேலெழுந்துள்ள இந்த புகார்கள் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த ஒப்பந்ததாரர்கள் தற்போது வெளிப்படையாகவே பேட்டி கொடுக்க தொடங்கியுள்ளனர்.

கேள்வி

கேள்வி

கடந்த சில நாட்களாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டுமே மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தொடர் ரெய்டுகளை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட புகார்கள் தொடர்பாக பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் சோதனை மேற்கொள்ளுமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஓராண்டுக்கும் மேலாக

ஓராண்டுக்கும் மேலாக

பெங்களூருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், நகர முனிசிபாலிட்டி ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவருமான ஆர் அம்பிகாபதி சமீபத்தில் பெங்களூருவின் டோம்லூரில் ரூ.5 கோடி மதிப்பில் விளையாட்டு மைதான் ஒன்றை கட்டியெழுப்பியுள்ளார். இதற்காக அரசு ஒதுக்கிய தொகையில் 40%-ஐ அமைச்சர்களின் சில இடைத்தரகர்களுக்கு லஞ்சமாக கொடுததாக கூறியுள்ளார். இவ்வாறு கொடுக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது இன்று நேற்று நடக்கும் பிரச்னையல்ல. சுமார் ஓராண்டுக்கும் மேலாக இது நீடித்து வருகிறது.

மறுப்பு

மறுப்பு

இது குறித்து பிரதமருக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இவ்வாறு வெளிப்படையாக பேட்டி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இவர்கள் கூறியுள்ளனர். அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பிரச்னை ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் கூறியுள்ளார்.

40 சதவிகிதம்

40 சதவிகிதம்

அம்பிகாபதியை தொடர்ந்து ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணைத் தலைவர் மஞ்சுநாத்தும் தொடர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மத்திய கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தொகுப்புதான் நான் கடைசியாக கட்டி முடித்தது. இந்த திட்ட பணிகளுக்கு முறையே ரூ.18 மற்றும் ரூ.10 ஒதுக்கப்பட்டது. இதில் இடை தரகர்களுக்கு நான் கமிஷன் கொடுக்க வற்புறுத்தப்பட்டேன். எனவே கொடுக்க நேர்ந்தது" என்று கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் இம்மாதிரியான ஊழல்களும், முறைகேடுகளும் எல்லா ஆட்சிக்காலத்தில் இருந்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 5 சதவிகிதமாக இருந்த இந்த கமிஷன் தொகை 40 சதவிகிதமாக அதிகரித்ததாக ஒப்பந்ததாரர்களின் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+