Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 வயது பெண்ணை திருமணம் செய்த 60 வயது முதியவர்.. அசந்துபோன கர்நாடகா.. பின்னணி என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் திடீரென 60 வயது முதியவர் 30 வயது நிரம்பிய பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர்களின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய காலத்தில் திருமண நடைமுறைகள் என்பது மாறிப்போய் உள்ளது. காலத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விஷயமும் மாறி வரும் நிலையில் திருமணமும் அடுத்தக்கட்ட பரிணாமத்தை அடைந்துள்ளது. அதில் ஒன்று தான் திருமணம் செய்து கொள்பவர்களின் வயது.

60-year-old man married 30 year old woman in Chikkaballapur

தற்போது வயது குறைந்த பெண்ணை வயதில் மிகமூத்த ஆணும், வயது அதிகமுள்ள பெண்ணை வயது குறைந்த ஆணும் திருமணம் செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக பெரிய பெரிய பிரபலங்கள் தங்களின் முதிய வயதிலும் கூட இளம்வயதினரை கரம்பிடிப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம்.

அந்த வகையில் தான் கர்நாடகத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தன்னை விட 30 வயது குறைந்த அதாவது வெறும் 30 வயது நிரம்பிய பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார். அதுகுறித்த விபரம் வருமாறு: சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா அப்பேகவுடனஹள்ளி கேட்டை சேர்ந்தவர் ஈரண்ணா (வயது 60). அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர்.

சமீபத்தில் ஈரண்ணாவின் மனைவி மறைந்தார். இதையடுத்து ஈரண்ணாவை கவனிக்க அவரது மகன், மகள் மறுத்துவிட்டனர். இதனால் வயதான காலத்தில் தனதுக்கு ஒரு துணை வேண்டும் என்று அவர் நினைத்தார். இதையடுத்து அவர் இ்ன்னொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொள்ள தயாரானார். இதற்காக பெண் தேடினார்.

60-year-old man married 30 year old woman in Chikkaballapur

அப்போது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த 30 வயது நிரம்பிய அனு என்பவரை ஈரண்ணாவுக்கு பிடித்துப்போனது. அனுவும், ஈரண்ணாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து அனுவின் குடும்பத்தினர், ஈரண்ணாவுக்கு நெருக்கமானவர்கள் முன்னிலைியல் நேற்று அப்பே கவுடனஹள்ளி கேட் பகுதியில் உள்ள பயல் ஆஞ்சநேயசாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

இதுதொடர்பான செய்தி வலைதளங்களில் போட்டோவுடன் வெளியானது. இதை பார்த்த பலரும் ஈரண்ணா-அனு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் சிலர் இந்த திருமணத்துக்கான வயதை காரணம் காட்டி தவிர்த்து இருக்கலாம் என்பதோடு, குறைந்த வயது பெண்ணை தவிர்த்துவிட்டு ஈரண்ணா தனக்கு ஏற்றது போல் வேறு பெண்ணை கரம்பிடித்து இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+