பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெஞ்சே பதறுதே.. முதியவரை 1 கிமீ தரதரவென ரோட்டில் இழுத்துச்சென்ற பைக்.. பரபரப்பான பெங்களூரு!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பட்ட பகலில் பரபரப்பான சாலையில் 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்தபடி ஸ்கூட்டர் ஒன்று சென்றது சக வாகன ஓட்டிகளை அதிர வைத்தது. உடனடியாக அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞரை சக வாகன ஓட்டிகள் மறித்து நிறுத்தினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

டெல்லியில் இளம்பெண் ஒருவர் காரில் 13 கி.மீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டெல்லி சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் பெங்களூருவில் பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சை பதற வைக்கும் வகையிலான இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

டெல்லியில் தரதரவென காரில் இழுத்து செல்லப்பட்ட பெண்! வெளியே தொங்கிய உறுப்புகள்! ஷாக் சிசிடிவி காட்சிடெல்லியில் தரதரவென காரில் இழுத்து செல்லப்பட்ட பெண்! வெளியே தொங்கிய உறுப்புகள்! ஷாக் சிசிடிவி காட்சி

முதியவரை இழுத்தப்படி சென்ற ஸ்கூட்டர்

முதியவரை இழுத்தப்படி சென்ற ஸ்கூட்டர்

கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களுருவில் எப்போதும் சாலை போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று சொல்லப்படும் பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் உள்பட ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால், சாலையில் வாகனப்போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், இத்தகைய பரபரப்பு மிக்க பெங்களூரு நகரத்தின் சாலையில் இன்று பட்டபகலில் 71 வயதான முதியவர் ஒருவரை இழுத்தபடி ஸ்கூட்டர் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

பதறிய வாகன ஓட்டிகள்

பதறிய வாகன ஓட்டிகள்

சுமார் 1 கி.மீட்டர் தூரம் முதியவரை இழுத்தபடி ஸ்கூட்டரை இளைஞர் ஒருவர் ஓட்டிச்சென்றுள்ளார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் பதறியுள்ளனர். உடனடியாக வாகன ஓட்டிகள் சிலர் இளைஞரை மறித்து நடந்த சம்பவம் குறித்து தட்டிக்கேட்டுள்ளனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டரை எட்டி பிடித்து..

ஸ்கூட்டரை எட்டி பிடித்து..

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், முட்டப்பா என்ற 71 வயது முதியவர் காரில் வந்து கொண்டு இருக்கிறார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஷாகில் என்பவர் முட்டாப்பாவின் காரை இடித்ததாக தெரிகிறது. இதனால், கோபம் அடைந்த முட்டப்பா காரை விட்டு இறங்கி ஷாகிலிடம் வாக்கு வாதம் செய்து இருக்கிறார். ஆனால் அங்கிருந்து ஷாகில் புறப்பட்டு செல்ல முற்பட்டு உள்ளார். இதனால் அந்த முதியவர் ஸ்கூட்டரை எட்டி பிடித்துள்ளார்.

வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது

வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது

ஆனாலும் ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஒரு கி.மீட்டருக்கு முதியவரை இழுத்தபடியே ஷாகில் ஓட்டிச்சென்றுள்ளார். பைக்கில் இழுத்து வரப்பட்ட ஷாகில் காயம் அடைந்துள்ளார். ஷாகிலை கைது செய்துள்ளோம்" என்றார். தனது பொலிரோ கார் மீது ஸ்கூட்டரை கொண்டு இடித்து விட்டதாகவும் இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் ஓட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ள முதியவர் முட்டப்பா.. இதுபோல வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் இப்படி செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி கஞ்சவாலா

டெல்லி கஞ்சவாலா

தலைநகர் டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 20 வயதான இளம்பெண் ஒருவர் மீது மோதிய கார் நிற்காமல் சென்றது. விபத்தில் சிக்கிய இளம்பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் அந்தப் பெண்ணின் உடலுடன் சுமார் 13 கி.மீட்டர் கார் சென்றது. அதாவது சாலையில் தரதரவென இழுத்துக்கொண்டே கார் சென்றது. இதில் ஆடைகள் அனைத்தும் கிழிந்தும் உடல் உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிரவைத்தது. இந்த வழக்கில் காரில் இருந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

English summary
On a busy day in Bengaluru, Karnataka, a 71-year-old man was dragged on the road by a scooter that shocked fellow motorists. The young man who was driving the scooter was immediately stopped by his fellow motorists. The CCTV footage related to this has been released and has caused outrage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X