'பெரிகார்டிடிஸ்'.. 7 வயது மாணவனுக்கு திடீர் மாரடைப்பு! நிகழ்விடத்திலேயே பலியான சோகம்! இதுதான் காரணமா
பெங்களூர்: கர்நாடகாவில் மாரடைப்பு ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் 'பெரிகார்டிடிஸ்' எனப்படும் 'இதய அழற்சி' நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
'பெரிகார்டிடிஸ்' என்பது அனைத்து வயதினருக்கும் வரும் நோய் என்றும் ஆனால் இது அரிதாகவே வரும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த பாதிப்பு குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்
கர்நாடக மாநிலத்தின் மங்களூரு மாவட்டத்தில் உள்ள அமரமுத்னூர் கிராமத்தில் மோக்ஷித் எனும் 7 வயது சிறுவன் ஒருவன் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில், நிகழ்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு சிறுவன் வீடு திரும்பிய நிலையில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறான். உடனே மருத்துவமனையில் அவனை அனுமதித்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டான் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சு வலி
இதனையடுத்து சிறுவனின் உடற்கூறு ஆய்வு வெளிவந்தது. இதில் சிறுவனின் இறப்புக்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சிறுவனுக்கு 'பெரிகார்டிடிஸ்' எனும் இதய அழற்சி நோய் இருந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்த நோய் எல்லா வயதினரையும் தாக்கும் என்றாலும் மிக அரிதாகவே வரும் நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல சிறுவன் உயிரிழப்பதற்கு முன்னர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறான். அவ்வப்போது நெஞ்சு வலி என பெற்றோரிடம் கூறியுள்ளான்.

மருத்துவர்கள் சொல்வதென்ன?
ஆனால் இது குறித்து உரிய பரிசோதனை செய்யாததால் தற்போது சிறுவன் உயிரிழந்துள்ளான் என பிரதேச பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதயத்தின் பெரிகார்டியத்தில் ஏற்படும் வீக்கம்தான் பெரிகார்டிடிஸ் என அழைக்கப்படுகிறது. வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட தொற்றுக்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம். அதேபோல இதயம் உள்ள பகுதியில் ஏதேனும் பலத்த அடி பட்டாலும் இந்த பாதிப்பு ஏற்படும். இந்த பகுதி வழவழப்பான ரசாயனம் கொண்ட பகுதியாகும்.

வகைகள்
இவ்வாறு அடிபடும்போதும், மேற்குறிப்பிட்ட காரணங்களாலும் இந்த ரசாயன திரவம் கசிந்து அப்பகுதி வீக்கமடைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. பெரிகார்டிடிஸ் பொதுவாக நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகை இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தும். பின்னர் நின்றுவிடும். அடுத்த வகை இதேபோல நெஞ்சு வலி 4-6 வாரங்களுக்கு பிறகு ஏற்படும். மூன்றாவது வகையில் நெஞ்சு வலி சில வாரங்கள் இடைவெளி விட்டு உருவாகி 3-6 வாரங்கள் வரை நீடித்து இருக்கும். அடுத்தது நான்காவது வகை. இது தொடக்கத்தில் எதுவும் சரியாக தெரியாது. ஆனால் நாளாக நாளாக நெஞ்சு வலி அதிகரிக்க தொடங்கும். மற்ற மூன்று வகைகளில் இருப்பது போன்று இடைவெளி எதுவும் இருக்காது என்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications