வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்! பெங்களூரில் பைக்கில் சென்று கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த இளைஞன்
பெங்களூரு: சமீபத்திய நாட்களாக மனிதர்கள் அவசர அவசரமாக எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருப்பதை போல தோன்றுகிறது. இந்த சிந்தனையை சில நிகழ்வுகளும் அவ்வப்போது உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு நகரத்தின் மைய மேம்பாலம் ஒன்றில் பைக்கில் அமர்ந்தபடி ஒருவர் லேப்டாப்பை வைத்து வேலை செய்துகொண்டே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லிங்க்ட்இன் எனும் சமூக வலைதளத்தில் ஹர்ஷ்மீத் சிங் எனும் பயனர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று பயங்கர வைரலானது. புகைப்படத்துடன், "பெங்களூரு சிறப்பானதா அல்லது மோசமானதா?" என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், "இரவு 11 மணியளவில் நகரத்தின் பரபரப்பான மேம்பாலம் ஒன்றில் இந்த இளைஞன் லேப்டாப் வைத்து வேலை செய்தவாறு பயணித்துக்கொண்டிருக்கிறான். சக ஊழியரின் உயிரை பணயமாக வைத்து அவசரமாக வேலையை முடிக்க விரும்பும் தலைமையா நீங்கள்? எனில் உங்களின் சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது" என்றும் குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்.
இந்த போஸ்ட்க்கு ஏறத்தாழ 40,000 லைக்குகள் குவிந்துள்ளன. பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதில் சிலர் ஹர்ஷத்தின் கருத்தை வரவேற்றனர். பலர் மாற்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சிலர் இது பெங்களூரு இல்லை எனவும் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் சாலை விபத்துக்களில் சராசரியாக ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 93 சதவிகித விபத்துகள் வளர்ந்து வரும் நாடுகளில்தான் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 3,66,138 பேர் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர். இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். 3,48,279 பேர் படுகாயமடைந்துள்ளதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications