இந்த மனசு தான் சார் கடவுள்!புனித் ராஜ்குமார் பெயரில் இலவச ஆம்புலன்ஸ்கள்! நடிகர் பிரகாஷ் ராஜ் வழங்கல்
பெங்களூர்: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக ‛அப்பு எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஏழைகளுக்காக மைசூர் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார். இன்னும் 31 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்க உள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான புனித், கன்னட திரையுலகில் மூடிசூடா மன்னராக வலம் வந்தார்.
அதாவது தந்தை ராஜ்குமார் போலவே அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரால் அன்புடன்‛அப்பு' என அழைக்கப்பட்டு வந்தார்.

மறைத்த புனித் ராஜ்குமார்
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மாரடைப்பால் இறந்தார். இளம் வயதில் அதாவது வெறும் 46வது வயதில் புனித் ராஜ்குமார் காலமானது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய செய்தது. இந்நிலையில் தான் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உதயமான நவம்பர் 1ம் தேதி புனித் ராஜ்குமாருக்கு அந்த விருதை மாநில அரசு வழங்க உள்ளது

ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ் ராஜ்
இதன் தொடர்ச்சியாக தான் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ் ஏழை மக்கள் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார். பிரகாஷ் ராஜ் தான் நடத்தி வரும் அறக்கட்டளை வாயிலாக ‛அப்பு எக்ஸ்பிரஸ்' எனும் பெயரில் இந்த ஆம்புலன்ஸை வழங்குகிறார். முதற்கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 31 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் அவர் ஆம்புலன்ஸ்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 31 ஆம்புலன்ஸ்கள்
புனித் ராஜ்குமாரும், பிரகாஷ் ராஜ் ஆகியோர் அஜய், ரணவிக்ரமா, ராஜகுமாரா, 'யுவரத்னா' ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இதில் ராஜகுமாரா, யுவரத்னா படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஆனந்தராம் ஆம்புலன்ஸை மைசூர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார். இதுதொடர்பாக இயக்குனர் ஆனந்தராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பிரகாஷ் ராஜ் சார்பில் அப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மைசூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்தில் உள்ள இன்னும் 31 மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் என்னை பங்கேற்க செய்த பிரகாஷ் ராஜூவுக்கு நன்றி'' என கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் கூறியது என்ன?
புனித் ராஜ்குமார்-பிரகாஷ் ராஜ் ஆகியோர் திரையுலகை தாண்டி குடும்ப நண்பர்களாகவும் இருந்தனர். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛அப்பு எக்ஸ்பிரஸ், என அன்பான புனித் ராஜ்குமாரின் நினைவாக ஏழைகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதில் மகிழ்ச்சி அடைகிறோம்'' என கூறியுள்ளார். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்தவர்கள், ஏராளமான குழந்கைளின் கல்விக்கும் கைக்கொடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவரது செயலை நினைவுப்படுத்தும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications