புனித் ராஜ்குமார் உயிரை பறித்த தாமதம்.. சீரியசான பிறகுதான் மருத்துவமனையில் அட்மிட்.. நடந்தது என்ன?
பெங்களூர்: நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுதான், அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனதற்கு காரணம். மருத்துவரின் பேட்டியும் இதை உறுதி செய்துள்ளது.
Recommended Video
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஜாம்பவான் நடிகர் ராஜ்குமார். அவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேருமே திரைத் துறையில் இருந்தாலும் கூட இரண்டாவது மகன் சிவராஜ்குமார் மற்றும் கடைசி மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்ட சூப்பர்ஹிட் நடிகர்கள்.
இந்த நிலையில்தான் இன்று காலையில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்ற புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

நெஞ்சு வலி
புனித் ராஜ்குமார் நெஞ்சுவலி என்று கூறிய பிறகும் கூட உடனே மருத்துவமனைக்கு போகவில்லையாம். அவருக்கு வலி அதிகரித்த நிலையில் இதன் பிறகு பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை
மதியம் 12 மணி அளவில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அப்போதே நிலைமை மிகவும் மோசமாக போய் விட்டதாக கூறப்படுகிறது. எனவே ஈசிஜி உள்ளிட்ட சோதனைகளை விரைவாக எடுத்துள்ளார்கள் அவருக்கு மாரடைப்பு என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மோசமான நிலை
இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருக்கிறது . இப்போதைக்கு நாங்கள் எதையும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்கு அவரை அழைத்து வரப்பட்டபோதே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புனித் ராஜ்குமார் மரணம்
இந்த தகவலறிந்ததும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கூடி கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர். பெங்களூரின் பல பகுதிகளிலும் மைசூரு உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் அவசரஅவசரமாக வீடுகளுக்கு திரும்பினர். இதனிடையே இன்று மதியம் 2.30 மணியளவில், புனித் ராஜ்குமார் மரணமடைந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முதல்
நேற்று இரவு முதல் புனித ராஜ்குமார் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என்று நினைத்து அவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று காலையில் உடற்பயிற்சி செய்துள்ளார். இது அனைத்து பிரச்சினைகளும் சேர்ந்து அவரது உடல்நிலையில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications