பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏரோ இந்தியா 2021... அற்புதமான வெற்றி... குடியரசு தலைவர் புகழாரம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி முன்பு எப்போதும் அளவிற்கு அற்புதமான வெற்றியை பெற்றுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழ்ந்துள்ளார்.

13 வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் பிப்ரவரி 3 ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை நடைபெற்றது. 1996 ம் ஆண்டு துவங்கி நடத்தப்பட்டு வரும் இந்த ஏரோ இந்தியா விமான கண்காட்சி நிகழ்ச்சியை பெங்களூரு நிர்வாகம் நடத்தி வருகிறது.

Aero India 2021: President Kovind calls event an unprecedented success

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 3ம் தேதி தொடங்கி வைத்தார். பெங்களூரில் உளள் எலஹங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

விவசாய சட்டங்களில் என்ன தவறு? ஒரு மாநிலத்தில் மட்டுமே போராட்டம்... அமைச்சர் நரேந்திர சிங் தோமர்விவசாய சட்டங்களில் என்ன தவறு? ஒரு மாநிலத்தில் மட்டுமே போராட்டம்... அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

4 நாள் பயணமாக கர்நாடகா வந்துள்ள குடியரசு தலைவர், ஏரோ இந்தியா 2021 கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏரோ இந்தியா 2021 முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அற்புதமான வெற்றியை பெற்றுள்ளது. கலப்பு வடிவில் நடைபெறும் இந்நிகழ்ச்சி உலகின் முதல் பிரம்மாண்ட நிகழ்ச்சி.

43 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள், 530 கம்பெனிகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்களும், இந்த துறை சார்ந்த உலகின் இன்னும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலப்பின நிகழ்ச்சியாக இது விளங்குகிறது என தெரிவித்தார்.

English summary
Aero India 2021 has been an unprecedented success, said President Ram Nath Kovind on Friday, adding that it is the world's first mega event of this kind to be held in a hybrid format.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X