முஸ்லிம் தொப்பி அணிந்த மாணவர் மீது தாக்குதல்! கர்நாடக கல்லூரியில் முடியாத சர்ச்சை! தலையிட்ட கோர்ட்
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியில் கல்லூரி வளாகத்தில் முஸ்லிம் தொப்பி அணிந்திருந்த மாணவரை திட்டி தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி கல்லூரி முதல்வர், போலீஸ் எஸ்ஐ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தெரதாள் நகரில் அரசு டிகிரி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 19 வயது நிரம்பிய நவீத் ஹாசன் சாப் என்பவர் படித்து வருகிறார்.
கர்நாடக கல்லூரி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி மாதத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வகுப்புக்குள் அனுமதி மறுப்பு
இந்த வேளையில் நவீத் ஹாசன் சாப் முஸ்லிம்களுக்கான தொப்பி அணிந்து கல்லூரி வளாகத்தில் நின்றார். அப்போது அரசு மதம் சார்ந்த உடைகள், அடையாளங்கள் அணிந்து செல்ல எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் கல்லூரி முதல்வர் நவீத் ஹான் சாப்பை கல்லூரி வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாணவர் மீது தாக்குதல்
மேலும் கல்லூரி முதல்வர், ஊழியர்கள், போலீஸ் எஸ்ஐ ஒருவர் என மொத்தம் 7 பேர் மாணவரின் மதநம்பிக்கை பற்றி தவறாக பேசியதோடு, தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்லூரி முதல்வர், எஸ்ஐ உள்பட 7 பேர் மதநம்பிக்கை குறித்து அவதூறாக பேசி தாக்கியதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

வழக்குப்பதிவு
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கல்லூரி முதல்வர், எஸ்ஐ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதனடிப்படையில் 7 பேர் மீதும் தெரதாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த வழக்கு ஜமகண்டி துணை எஸ்பி விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

மாணவர் மீது புகார்
முன்னதாக தனது பணிக்கு இடையூறு செய்ததாகவும், தாக்கியதாகவும் கல்லூரி முதல்வர் சார்பில் மாணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இது நிலுவையில் உள்ள நிலையில் தான் தான் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கல்லூரி முதல்வர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications