தலைக்கேறிய உல்லாசம்.. ஜன்னலில் உருவம்.. போலீசுக்கு ஓடிய பெண்.. பெங்களூர் தண்ணி பிரச்சனையில் இது வேற
பெங்களூர்: குளிப்பதற்கும், குடிப்பதற்கும்கூட தண்ணீரின்றி தத்தளித்து கிடக்கிறது சிலிக்கான் சிட்டி.. இப்படிப்பட்ட சூழலில், வினோத பிரச்சனையுடன் போலீசுக்கு சென்றுள்ளார் பெண்மணி ஒருவர்.
அந்த பெண்ணுக்கு 44 வயதாகிறது.. இவர் கிரிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் ஒன்றை கொண்டுபோயிருக்கிறார்.. அந்த புகாரை பார்த்ததுமே போலீசுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.

காரணம், தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோடி எப்போதும் ரொமான்ஸ் செய்து கொண்டு உல்லாசமாக இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
உல்லாசம்: அதாவது, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய மனைவியுடன் எப்போதுமே உல்லாசமாக இருப்பாராம்.. அதுவும் தன்னுடைய வீட்டு கதவு, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டே, தம்பதியினர் சந்தோஷமாக இருக்கிறார்களாம்... அதிகப்படியான உல்லாசமாக இந்த தம்பதியினர் நடந்து கொள்கிறார்களாம்.. அந்த இளம் தம்பதியினரின் காதல் சைகைகள், இந்த பெண்ணுக்கு எரிச்சலை தருகிறதாம்..
தொடர்ந்து அந்த புகாரில் அவர் சொன்னபோது, "பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பதியினர் வெளிப்படையாக உல்லாசமாக நடந்து கொள்வது, என்னுடைய குடும்பத்தினரை வருத்தம் அடையச் செய்கிறது. இது தொடர்பாக அவர்களிடம் தட்டிக்கேட்ட முயன்றபோது மிரட்டல் விடுக்கிறார். தம்பதியினரின் உல்லாச நடவடிக்கைகள், எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
ஹவுஸ் ஓனர்: வீட்டின் உரிமையாளர் சிக்கனா மற்றும் அவரது மகன் மஞ்சுநாத் ஆகியோர் அந்த தம்பதியினருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பிறரின் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று என்னை அவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த புகாரையடுத்து, அந்த தம்பதிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 504, 506, 509, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், குற்றமிழைப்பு, வார்த்தை, சைகை போன்ற குற்றங்கள் குறித்து போலீசார், எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறதாம். இதற்குபிறகுதான், சம்பந்தப்பட்ட தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.
அதிர்ச்சி: ஏற்கனவே குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு புகாரா? என்று அதிர்ந்து கேட்கிறார்களாம் பெங்களூர்வாசிகள்...!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications