பெங்களூர் புறநகரில் கொடூரம்! திடீரென பற்றி எரிந்த கார்.. பிரபல தொழிலதிபர் தற்கொலை? திக்திக் சம்பவம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென கார் ஒன்று பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அருகே சென்று பார்த்த போது உள்ளே தொழிலதிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் இருந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் இப்போது அடுத்த கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் ஒன்று பற்றி எரிந்த நிலையில், பிரபல தொழிலதிபரின் உடல் எரிந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பெங்களூரு முடின்பாலியா என்ற பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை கார் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதை அங்குச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உயிரிழப்பு: இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், காரை அணைக்க முயன்றனர். இருப்பினும் காவலர்கள் தீயை அணைப்பதற்குள் உள்ளே இருந்த நபர் மூச்சுத்திணறல் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் உயிரிழந்த நபர் 42 வயதான தொழிலதிபர் சி பிரதீப் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
"பணக்கார பெண்களுடன் உடலுறவு கொண்டு.. கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் தரோம்" அலறவிடும் புதுவித மோசடி
ஹோட்டல் ஆலோசகரான பிரதீப், அவராகவே தனது காரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டி வந்துள்ளார். மேலும், அவரே தனது காருக்கு தீ வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.. முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும் போது பிரதீப் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனத் தெரிவதாகக் குறிப்பிடும் போலீசார், இது தொடர்பாக அடுத்த விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
விசாரணை: முதற்கட்டமாக பிரதீப்பின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு அவர் எதாவது கடிதம் எழுதி வைத்து இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவருக்குக் கடன் தொல்லை எதாவது இருந்ததா இல்லை தனிப்பட்ட முறையில் எதாவது பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் தகவல்: இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், "நேற்று மாலை எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கார் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட தீயணைப்பு அதிகாரிகள், அதை அணைத்தனர். இருப்பினும், அதிகாரிகள் அங்குச் செல்வதற்கு முன்பே உள்ளே இருந்த அந்த நபர் உயிரிழந்து கிடந்தார். பின்னர் தீ அணைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பைதரஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தற்கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவர் தனியாகவே இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை.. இந்த விவகாரத்தில் பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications