கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க
பெங்களூர்: தர்மபுரி - பாலக்கோடு இடையே ரயில் நிலையங்களில் தண்டாவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பெங்களூர் கண்டோன்மென்ட் - கோவை வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் கொண்டு வர அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதிவேகம், சொகுசு வசதி என பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் எல்லாம் பகல் நேர ரயில்கள் ஆகும்.

வந்தே பாரத் ரயில்: முழுவதும் ஏசி வசதி செய்யப்பட இந்த ரயில்களில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயோ டாய்லட், தானியங்கி கதவு, விசாலமான ஜன்னல் திரைகள், சுழலும் இருக்கைகள் என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன. 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை - பெங்களூர் ரயில்: தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி, சென்னை - மைசூர் (பெங்களூர் வழியாக), கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலும் இடையே இயக்கப்படுகிறது. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்! வந்தே பாரத் ஸ்பெஷல் ரயில் நீட்டிப்பு.. சொந்த ஊர் ஈசியா போகலாம்
புறப்படும் நேரம் மாற்றம்: இந்த ரயில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு பிற்பகல் 1.50 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூரில் 2.20 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.45 மணிக்கு வந்து சேரும். இந்த நிலையில் தான் வந்தே பாரத் ரயிலில் பெங்களூரில் இருந்து கோவைக்கு புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி: தர்மபுரி - பாலக்கோடு இடையே ரயில் நிலையங்களில் இன்ஜினீயரிங் வேலை மற்றும் தண்டாவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பெங்களூர் கண்டோன்மென்ட் - கோவை வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் கண்டோன்மென்டிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்.20641), அதற்கு மாற்றாக, நாளை (திங்கட்கிழமை) முதல் மே 28 ஆம் தேதி வரையில் (வியாழக்கிழமை மட்டும்) பெங்களூர் கண்டோன்மென்டிலிருந்து மதியம் 3.15 மணிக்கு (55 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு கோவை வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications