புனித் ராஜ்குமார் மரணம்.. பெங்களூரில் பள்ளிகள், கடைகள் மூடல்.. அவசர அவசரமாக வீடு திரும்பும் மக்கள்
பெங்களூர்: நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அவசர அவசரமாக மூடப்பட்டு வருகின்றன. அலுவலகம் சென்றவர்கள் அவசரமாக வீடு திரும்பி வருகின்றனர்.
Recommended Video
கர்நாட ஜாம்பவான் மறைந்த ராஜ்குமாரின், கடைசி மகன் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கக் கூடியவர். இவரது அண்ணன் சிவராஜ்குமார் மிகப்பெரிய நடிகர். இருவருக்கும் மாநிலம் முழுக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை உடற்பயிற்சி கூடத்தில் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூர் நகரில் உள்ள விக்ரம் என்ற மருத்துவமனையில் புனித் ராஜ்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை
ஏற்கனவே இவரது அண்ணன் சிவராஜ்குமார் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போதும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்று திரும்பினார். கிட்டத்தட்ட ராஜ்குமார் குடும்பத்தினருக்கு இது ஒரு குடும்ப மருத்துவமனை மற்றும் குடும்ப டாக்டர்கள் போன்றதாகும். இந்த நிலையில்தான் சிவராஜ்குமார் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தனர். ஏனெனில் நேற்று இரவு முதலே புனித்ராஜ்குமார் உடல்நிலையில் பிரச்சினை இருந்துள்ளது. ஆனால் காலையிலும், அவர் ஜிம் சென்றுள்ளார். இதனால் உடல்நிலை மோசமாகியுள்ளது.

சொல்ல முடியாது
இதனிடையே, புனித் ராஜ்குமார் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது என்றும் மருத்துவர்கள் அறிவித்து விட்டனர்.

ரசிகர்கள் குவிந்தனர்
நன்கு ஆடிப்பாடி திரைப்படங்களில் நடித்து வந்த தங்கள் அபிமான நடிகர் திடீரென மாரடைப்பு காரணமாக அதுவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தெரிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கூடி குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்கள் தொலைபேசிகளில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அழும் காட்சிகள் வெளியாகின. இந்த நிலையில்தான், மதியம் 2.30 மணியளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் அழுது புரண்டனர்.

வணிக வளாகங்கள்
இதுபோன்ற பதட்டமான சூழ்நிலை காரணமாக பெங்களூர், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பூட்டப்பட்டு வருகின்றன. அலுவலகம் சென்றவர்கள் அவசரமாக வீடுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகள் அவசரமாக மூடப்பட்டு மாணவ, மாணவிகளை பெற்றோர் அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகங்கள் அறிவித்தன.

பெங்களூர் கலவரம்
நடிகர் ராஜ்குமார், 2006ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ம் தேதி, மரணமடைந்தபோது பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாக்கப்பட்டன. இந்த அச்சத்தின் காரணமாக மக்கள் அவசரஅவசரமாக வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications