Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதறும் பெங்களூர் PGகள்.. "ஒரு வாரம் தான் சமாளிக்க முடியும்!" சிலிண்டர் பற்றாக்குறையால் சாப்பாடு கட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக இப்போது கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன. பெங்களூரில் உள்ள பிஜிக்களில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்கனவே தெரிய ஆரம்பித்துவிட்டது. நிலைமை சீராகவில்லை என்றால் ஒரு வாரம் மட்டுமே சமாளிக்க முடியும் எனச் சொல்லும் பிஜி உரிமையாளர்கள், மெனுக்களையும் குறைக்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. மத்திய கிழக்கில் இந்த மோதல் வெடித்துள்ள சூழலில், அது அந்த பிராந்தியத்தைத் தாண்டி உலகெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலை எகிற ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே இந்த மோதலால் ஏற்படும் பாதிப்பு இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது.

Bangalore PG gas Crisis Food Supply May Last Only 1 Week Amid LPG Shortage What is the issue

கேஸ் பற்றாக்குறை

பெங்களூரில் ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையால், பல உணவகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நகரிலுள்ள பிஜிகளிலும் (PG) இதன் பிரஷர் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதே கேஸ் நெருக்கடி தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஹாஸ்டலில் தங்குபவர்களுக்குத் தடையின்றி உணவு வழங்க முடியும் என எச்சரித்துள்ளனர். சில பிஜிக்கள் ஏற்கனவே தங்களது மெனுவை குறைக்கத் தொடங்கியுள்ளன.

கர்நாடக தலைநகரான பெங்களூரில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பெரும்பாலானோர் பிஜிக்களில் தான் தங்கி இருக்கிறார்கள். அங்கு சுமார் 15,000 பிஜிக்கள் உள்ளன. முறைசாரா பணியாளர்கள் தொடங்கி ஐடி ஊழியர்கள் வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அந்த பிஜிக்களில் தான் வசித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட பிஜிக்களிலும் தங்குபவர்களுக்குத் தினசரி மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இந்த பிராசஸ் தான் பாதிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் என்ன!

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பி.ஜி. உரிமையாளர் நலச் சங்கம், இன்று செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பிஜி உரிமையாளர் நலச் சங்கத்தின் தலைவர் அருண் குமார் ஆங்கில ஊடகமான டெக்கன் ஹெரால்டிற்கு அளித்த பேட்டியில், "எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இந்த அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. கேஸ் தட்டுப்பாடு தொடர்ந்தால் எங்களால் அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே சமையலறைகளை இயக்க முடியும். அதன் பிறகு உணவு சப்ளை நிச்சயம் பாதிக்கப்படும்.

சமாளிக்க முடியாது

அரசு இந்த நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். தங்குபவர்களுக்குத் தினமும் மூன்று வேளை உணவும், கிட்டத்தட்டத் தினமும் வெந்நீரும் தேவைப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை எங்களைக் கடுமையாகப் பாதிக்கும். எங்களைப் போல அதிக பேர்களுக்குச் சமைக்கும்போது, இன்டக்‌ஷன் குக்கர்கள் உதவாது. ஒரு வேளைக்குக் குறைந்தது 50 பேருக்கு நாங்கள் உணவு வழங்குகிறோம். எனவே, இன்டக்ஷன் செட் ஆகாது. மேலும், பாதுகாப்பு கவலைகள் காரணமாக அதிக சிலிண்டர்களை எங்களால் வைத்திருக்க முடியாது. எங்களுக்கு எப்போதும் குறைந்தது மூன்று சிலிண்டர்கள் தேவைப்படும்" என்றார்.

மெனு

பெங்களூரில் உள்ள பிரபல பிஜி உரிமையாளர் ஒருவர் இது தொடர்பாகக் கூறுகையில், "எங்கள் பிஜிக்களில் தங்குவோருக்கு எப்போதும் காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு மூன்று முதல் நான்கு வகை உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மேல் எங்களால் சமாளிக்க முடியாது. இப்போது எங்களிடம் ஆறு காலி சிலிண்டர்கள் உள்ளன. புதிய சிலிண்டர் வாங்க புக் செய்ய முயல்கிறோம். ஆனால் முடியவில்லை. இதனால் எங்கள் மெனுவை குறைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் எங்களுக்குக் கூடுதல் டைம் கிடைக்கும். மாற்று வழிகளைத் தேடவும் அவகாசம் கொடுக்கும்" என்றார்

பாதிப்பு ஏற்படுமா?

கேஸ் சிலிண்டர் மட்டுமின்றி இப்போது எல்லாம் கேஸ் மற்றும் சிஎன்டிஜிக்களில் வாகனங்களும் கூட இயங்குகின்றன. இதுவும் கூட பாதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளன. இருப்பினும் தற்போதைய சூழலில் அதில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என GAIL இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெங்களூர் அல்லது கர்நாடகாவில் வீடுகளுக்கும், கடைகளுக்கும், தொழில்துறைக்கும் வழங்கப்படும் பைப்லைன் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் கார்கள், ஆட்டோக்களுக்கான சிஎன்ஜி சப்ளையில் இப்போதைக்குப் பாதிப்பு இல்லை. இருப்பினும், நெருக்கடி தொடர்ந்தால், முதலில் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான விநியோகமே பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+