பெங்களூரில் இப்படி பெண்களா? ரோட்டில் நின்ற காஸ்ட்லி கார்.. கிட்டபோய் பார்த்த கர்நாடகா போலீஸ்.. இவரா?
பெங்களூரு: பெங்களூரு சாலையில் நின்றுகொண்டிருந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. கேட்பாரற்று கிடந்த அந்த காரின் அருகில் சென்ற போலீசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.. யாரிந்த மனைவி, மாமியார்? ரியல் எஸ்டேட் அதிபருக்கு என்ன நடந்தது? இதுகுறித்து, வடக்கு பெங்களூரு DCP சைதுல் அதாவத் செய்தியாளர்களிடம் தந்துள்ள பேட்டி மிகுந்த பரபரப்பை கர்நாடக மாநிலத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அப்படியென்ன நடந்தது?
பெங்களூரு அடுத்துள்ளது சிக்கபனாவரா என்ற பகுதி.. இங்கு சந்தேகத்திற்கமான முறையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர்..

அப்போதுதான், காரில் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த நபர் யார் என்று தெரியவில்லை. இதனால் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. இறந்தவர் குறித்த விசாரணையையும் கையில் எடுத்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
இதுகுறித்து வடக்கு பெங்களூரு DCP சைதுல் அதாவத் சொல்லும்போது, "'காருக்குள் இறந்தவர் பெயர் லோக்நாத் சிங்.. 37 வயதாகிறது.. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் யஷஸ்வினி.. 27 வயதாகிறது. மாமியார் பெயர் ஹேமா பாய் (47) என்பது தெரியவந்தது.
மனைவி, மாமியார் துணிகரம்
லோக்நாத் சிங்தை அம்மாவும், மகளும் சேர்ந்து விஷம் வைத்து கொன்றுள்ளனர்.. அவர் சாப்பிட்ட உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து தந்திருக்கிறார்கள்.. இது தெரியாமல் அந்த உணவை சாப்பிட்டு, லோக்நாத் மயங்கி விழுந்துள்ளார்..
உடனே மனைவியும், அவரது அம்மாவும், சடலத்தை காரில் எடுத்து போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். ஒதுக்குப்புறமான இடத்தில் காரை நிறுத்தி, லோக்நாத் சிங்கின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் மயக்க நிலையிலேயே லோக்நாத் உயிர் பிரிந்துள்ளது. இதற்கு பிறகு, லோக்நாத் சிங்கையும், காரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
பகிரங்க வாக்குமூலம் தந்த மனைவி
இது தொடர்பான தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியாரை கைது செய்தோம்.. அவர்களிடம் விசாரித்ததில், கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
லோக்நாத் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.. இந்த விஷயம் தெரிந்து குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். எனினும், அந்த பெண்ணுடன் உறவு நீடித்து வந்திருக்கிறது.
இந்த ஆத்திரம் தாங்காமல், தனக்கு துரோகம் செய்த கணவரை கொல்ல முடிவு செய்தார் மனைவி.. இதற்காகவே தூக்க மாத்திரை வாங்கி , சாப்பாட்டில் கலந்து கொடுத்து கழுத்தையும் அறுத்து கொன்றுள்ளார். இதற்கு உடந்தையாக தன்னுடைய அம்மாவை பயன்படுத்தி இருக்கிறார்.. இந்த கொலை குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications