Bangalore: பெங்களூரில் இருந்து புதுவைக்கு சுற்றுலா வந்த ஐடி என்ஜினியர்ஸ்.. ஒரு நொடியில் நடந்த விபரீதம்.. இப்படியா ஆகனும்
பெங்களூர்: பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்று விட்டு இளைப்பாற நினைப்பார்கள். அப்படித்தான் நேற்று முன் தினம் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து (Bangalore IT company employees) வந்த 12 பேர் புதுவைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட துயரம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.
பெங்களூரில் இருந்து புதுவைக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியர்களாக பணிபுரிந்து வந்த 5 பேர் புதுவைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து கடலில் இறங்கி குளித்து ஆனந்தமாக இருந்துள்ளனர். செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த நிலையில் திடீரென வந்த அலையால் அவர்களில் பெண் என்ஜினியர் உட்பட 3 பேர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பெங்களூர் (Bangalore) சாப்ட்வேர் என்ஜினியர்கள்
நேற்று முன் தினம் சுதந்திர தினம் என்பதாலும், தொடர்ந்து வார விடுமுறை நாட்கள் வந்ததாலும் பலரும் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாவுக்காக படையெடுத்தனர். புதுவையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாமல் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இதனால் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட குவிந்தனர்.
அந்த வகையில், கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணிபுரிந்து வந்த சிலரும் சுற்றுலா வந்துள்ளனர். கர்நாடகாவின் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த மேகா (வயது 29), ஹூப்ளியைச் சேர்ந்த பிரட்சுவால் மேத்தி (23), குஜராத்தைச் சேர்ந்த அதிதி (23), ஜீவன் (23), ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பவன்குமார் (25) உள்பட 12 பேர் புதுவைக்கு நேற்று முன் தினம் டெம்போ டிராவலர் வாகனத்தில் சுற்றுலாவுக்காக வந்தனர்.
செல்ஃபி மற்றும் புகைப்படங்கள்
நண்பர்களான 12 பேரும் புதுச்சேரியில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து நேற்று காலையில் அவர்கள் அனைவரும் அரியாங்குப்பம் அருகே சின்னவீராம்பட்டினத்தில் உள்ள நீலக்கொடி சான்று பெற்ற "ஈடன்" கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடலில் குளிப்பதற்கு தயாராகினர். இதையடுத்து உடைமைகளை கடற்கரையில் வைத்து விட்டு கடலில் இறங்கி உற்சாகத்துடன் குளித்தனர்.
அந்த கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை கயிறு கட்டப்பட்டு இருந்தது. ஆனால் இவர்களில் சிலர் உற்சாக மிகுதியில் கயிறை தாண்டி சென்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி மேகா, பிரட்சுவால் மேத்தி, பவன்குமார், அதிதி, ஜீவன் ஆகிய 5 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அருகில் நின்ற நண்பர்கள் அவர்களை மீட்க போராடினர். மேலும் உதவி கேட்டு அலறினர்.
3 பேர் உயிரிழப்பு
அதன்பேரில் கடற்கரையில் அமர்ந்திருந்த பொதுமக்கள், மீனவர்கள் கடலில் இறங்கி மூழ்கியவர்களை தேடினர். பின்னர் 5 பேரும் மீட்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேகா, பிரட்சுவால் மேத்தி, பவன்குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தது மற்ற நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மன அமைதிக்காகவும், ஆனந்தத்தோடு சுற்றுலா வந்த சாப்ட்வேர் என்ஜினியர்கள் உயிரிழந்தது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications