இருவர் உள்ள வீட்டுக்கு ரூ.17,000 தண்ணீர் பில்.. பெங்களூர் இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த ஹவுஸ் ஓனர்
பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூரில் வாடகை வீடு ஒன்றில் இருவர் மட்டுமே வசித்து வருகிறார்கள். ஆனால், அந்த வீட்டிற்குத் தண்ணீர் பில் மட்டும் ரூ.15,799 வந்துள்ளதாகச் சொல்லி, அதைக் கட்டுமாறு ஹவுஸ் ஓனர் கூறியிருக்கிறார். இருவருமே தினசரி ஆபீஸ் செல்லும் நிலையில், இவ்வளவு அதிக தொகை எப்படி வந்தது எனப் புரியாமல் புலம்பித் தள்ளுகிறார் அவர்! இது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஓனர்களுக்கும் வீட்டில் வாடகைக்கு இருப்போருக்கும் பல்வேறு பஞ்சாயத்துகள் இருக்கவே செய்யும். இணையத்தில் ஓபன் செய்து பார்த்தால் இது குறித்து பல்வேறு கதைகளை உங்களால் பார்க்க முடியும். இப்படி தான் அங்கு நடந்த மற்றொரு சம்பவம் குறித்த தகவல் இப்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

வாட்டர் பில்
அதாவது தனது ஓனர், அளவுக்கு அதிகமான தொகையைத் தண்ணீர் கட்டணமாக தன்னிடம் வசூலித்ததாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான தகவல்களை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள சூழலில், அது டிரெண்டாகி வருகிறது. அதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைக் கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் ஓனர்கள் இந்தளவுக்கு அதிக தொகையைக் கட்டணமாக வசூலிப்பதில் எந்தவொரு நியாயமும் இல்லை என பதிவிட்டுள்ளனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் BWSSB எனப்படும் பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தவறான பில்லிங் முறைகளே இதற்குக் காரணம் என்று சாடியுள்ளனர். ரெட்டிட் தளத்தில் இருக்கும் r/Bangalore என்ற பேஜில் அவர் இந்த புகார்களை வைத்திருக்கிறார். அதில் குறைந்தபட்ச தண்ணீரைப் பயன்படுத்தினாலும் கூட ஒவ்வொரு மாதமும் பெரும் தொகையைத் தண்ணீர் கட்டணமாகச் செலுத்துமாறு ஓனர் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ரூ.16,000
இது தொடர்பாக அவர் மேலும்,"எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தண்ணீர் கட்டணமாக மட்டும் சுமார் 10,000 ரூபாய் வருகிறது. நாங்கள் இருவரும் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே செலவிடுகிறோம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் வரை தண்ணீர் வருவது கூட இல்லை. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட சொல்கிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில், பில்லின் படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.. அதில் 1,65,000 லிட்டர் தண்ணீருக்கு ₹15,799 கட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
என்ன சிக்கலாக இருக்கலாம்
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டான சூழலில், பலரும் இது குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். பில் மீட்டரில் தவறு இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இவ்வளவு தெக்கை வர வாய்ப்பே இல்லை.. இரண்டு பேருக்கு அதிகபட்சம் 300 ரூபாயைத் தாண்டக்கூடாது. தயவுசெய்து குடிநீர் வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இதை சரி செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். மீட்டர் தவறாக இருக்கலாம் அல்லது தவறாக அளவிடப்பட்டிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நெட்டிசன்கள் கருத்து
மற்றொரு யூசர், தங்கள் வீட்டிற்கும் இதேபோல ஒருமுறை மாதத்திற்கு ₹4,000க்கும் அதிகமாக பில் வந்ததாகத் தெரிவித்தார். அவர் மேலும், "இது தொடர்பாகக் குடிநீர் வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று கேட்டோம். ஆனால் தங்கள் மீட்டரில் தவறு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.. மேலும், புதிய மீட்டரை வைக்க சொன்னால் அதுவும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதன் பிறகு தண்ணீர் வரும்போது மட்டும் மீட்டரை இயக்கத் தொடங்கினோம்.. எங்கள் பில் மாதத்திற்கு ₹400-₹500 ஆகக் குறைந்தது" என்று கூறியிருக்கிறார்..
இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் இருக்கும்போது ₹800 முதல் ₹3,000 வரை தண்ணீர் கட்டணம் வருவதாகப் பலரும் கூறியிருக்கிறார்கள். அப்படி பார்த்தாலும் இவர்களுக்கு ரூ.15,000 என்பது ரொம்பவே அதிகம் தான். எவ்வளவு சீக்கிரம் BWSSBஐ தொடர்பு கொண்டு புகாரளிக்க முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் புகாரளிக்க வேண்டும்.. இல்லையென்றால் வரும் மாதங்களிலும் இதே கட்டணம் தான் செலுத்த வேண்டி இருக்கும் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications