பத்திரிகையாளரின் கேமராவை பிடுங்கி உடைத்த போலீசார்.. பெங்களூர் SIR போராட்டத்தில் ஆத்திரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் 'SIR' நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் போராட்டக்காரர்களை தாக்கியதோடு போட்டோ எடுத்த பத்திரிகையாளர்களின் போட்டோகிராபரையும் கீழே தள்ளி கேமராவை பறித்து சேதப்படுத்திய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

bengaluru-cops-assault-photo-journalist-and-damage-their-cameras-when-record-ant-sir-protesters-deta

SIR நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்று உச்சநீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்தனர்.அதேபோல் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெங்களூர் சுதந்திர பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரப்பன்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூர் எஸ்ஜேபி கல்லூரி அருகே கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுக்கு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என்று பல்வேறு தரப்பு மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். வலுக்கட்டாயமாக இழுத்து போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பத்திரிகைகளில் பணியாற்றும் போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க முயன்றார்.

அப்போது போட்டோகிராபரை பிடித்து போலீசார் தாக்கியதோடு, கேமராவை பிடித்து இழுத்து உடைத்து விடுவதாக மிரட்டினர். அதுமட்டுமின்றி கேமரா, செல்போனை பிடுங்கி சேதப்படுத்தினர். அதேபோல் இன்னும் 3 பத்திரிகையாளர்களையும் போலீசார் தாக்கினர்.

இதுபற்றி போட்டோகிராபர்கள் கூறுகையில், ''கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை போட்டோ எடுக்க முயன்றோம். அப்போது போலீசார் போட்டோவை டெலிட் செய்ய சொன்னதோடு, ஒரு போட்டோகிராபரை கீழே தள்ளினர். செல்போனை பிடுங்கி வீசினர்'' என்று கூறினர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்க்கும் பலரும்'SIR'க்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் போராடி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் போராட்டக்காரர்களை படம்பிடித்த பத்திரிகை துறையை சேர்ந்த போட்டோகிராபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று சாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+