பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம
பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தான் புதிய வழித்தடமான பெங்களூர் பன்னரக்கட்டா ரோட்டில் கலேனா அக்ரஹாரா முதல் தாவரகெரோ வரை 7.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை ஆகஸ்ட் 15ம் தேதி இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பெங்களூர் நகரில் மொத்தம் 96.10 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

அந்த வகையில் பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
இதன் அடுத்தக்கட்டமாக தொடர்ந்து மெட்ரோ சேவையை விரிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் பன்னரக்கட்டா ரோட்டில் 'பிங்க்' வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 21.25 கிமீ தொலைவிற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அதன்படி பெங்களூர் கலேனா அக்ரஹாராவில் (இதற்கு முன்பு கொட்டிக்கெரே) இருந்து நாகவரா ஸ்டேஷன் வரை இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பயணிக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கலேனா அக்ரஹாராவில் இருந்து தாவரகெரே வரையிலான 7.5 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை பணி முடிவதுமாக முடிவடைந்துள்ளது. ஆர்டிஎஸ்ஓ (Research Designs and Standards Organisation or RDSO) சார்பில் ஆய்வு பணிகள் ஜூன் 4ம் தேதி தொடங்கியது. தற்போது வேக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளபப்ட உள்ளது. அனைத்து வகையான சோதனைகளும் ஜூன் மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது.
இந்த சோதனைகளில் பாசிட்டிவான ரிசல்ட் வரும் பட்சத்தில் கலினா அக்ரஹாரா - தாவரகெரே இடையே ஆகஸ்ட் 15ம் தேதி மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்புள்ளது. இந்த 7.5 கிலோமீட்டர் தொலைவில் மொத்தம் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் ஜெயதேவா மருத்துவமனையில் இன்டர்சேஞ்ச் வசதி உள்ளது. இங்கிருந்து பிற வழித்தடங்களில் பயணிக்கும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க முடியும்.
அதன்படி 'பர்பிள் லைன்' (சல்லக்கட்டா - ஒயிட்பீல்ட் (காடுகோடி)) மற்றும் 'மஞ்சள் லைன்' (ஆர்வி ரோடு -பொம்மசந்திரா லைன்) ரயில் பாதையில் இணைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த 'பிங்க்' வழித்தடத்தில் டெய்ரி சர்க்கிள் முதல் நாகவரா வரையிலான 13.75 கிலோமீட்டர் சுரங்கப்பாதையில் 2026 டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications