பெங்களூரை புரட்டிப்போட்ட மழை.. வெள்ளத்தால் ஓசூர் ரோடு தற்காலிகமாக மூடல்.. அவதிப்படும் மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் வெளுத்து வாங்கும் கனமழையின் காரணமாக பிரதான சாலையான ஓசூர் ரோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சில்க் போர்டு முதல் ரூபேன அக்ரஹாரா வரை ரோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் பயணிக்க வேண்டம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பெங்களூரின் தாழ்வான இடங்களில் உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ள. ராஜாஜி நகர், சாந்தி நகர், சில்க் போர்ட், ஹொரமாவு, எச்பிஆர் லே-அவுட் , கெங்கேரி, மாரத்தஹள்ளி, கொட்டிகேபாளையா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது.

அதேபோல் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இன்று காலை வரை பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பெங்களூருவுக்கு வரும் 23ம் தேதி வரை மஞ்சள் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பெங்களூர் - ஓசூர் ரோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் மாநகர போலீசார் சார்பில், அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காரணமாக பெங்களூரில் உள்ள ஓசூர் ரோடு சில்க்போர்டு முதல் ரூபேன அக்ரஹாரா வரை மூடப்பட்டுள்ளது. அதேபோல் மேம்பாலமும் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்று பாதையை தேர்வு செய்து பயணிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலையுடன் முடிவடைந்த 12 மணிநேரத்தில் பெங்களூரில் 130 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பெங்களூரில் 3 பேர் பலியாகி உள்ளனர். 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 20 ஏரிகள் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளன. அதேபோல் சாய் லே-அவுட் உள்பட அதனை சுற்றிய இடங்களில் மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றன. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பெங்களூரில் நகரில் இன்னும் 5 நாளைக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications