பெங்களூரில் 45 லட்சம் சம்பளம்.. 20 லட்சம் சம்பள உயர்வை நிராகரித்த ஐடி ஊழியர்.. திகைத்த தந்தை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அதிக சம்பளத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலையைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பள உயர்வை நிராகரித்த கதையை, பிரபல பிசினஸ்மேன் ஒருவர் பகிர்ந்துள்ளார். 31 வயதில் 45 லட்சம் சம்பளம் வாங்கும் அந்த ஐடி ஊழியர், அந்த பதவி உயர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று 65 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பார். ஆனாலும் இந்த பதவி உயர்வை அவர் ஏற்கவிலலை.. இது அவரது தந்தைக்கு பெரிய வியப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

யுஅபிலிட்டி என்ற வணிக ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் ரோஹன் தவான், லிங்க்ட்இன் பதிவில் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய 31 வயது நண்பர் தற்போது ஆண்டுக்கு ரூ.45 லட்சம் சம்பாதிக்கிறார். முன்மொழியப்பட்ட பதவி உயர்வு அவரது சம்பளத்தை ரூ.65 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தியிருக்கும், மேலும் ஒரு பெரிய குழு மற்றும் உயர் பதவியையும் அவருக்கு அளித்திருக்கும்.

Bengaluru Techie Earning Rs 45 Lakh Rejects Rs 20 Lakh Salary Hike His Father reaction

நிதி ரீதியான இந்த உயர்வு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பணி நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்படாத பல கோரிக்கைகளுடனும் இந்தப் பதவி உயர்வு வந்தது. இந்தப் புதிய பணிக்கு வாரத்தில் நான்கு இரவுகள் அமெரிக்காவைச் சேர்ந்த குழுவுடன் நள்ளிரவு தொலைபேசி உரையாடல்கள், அடிக்கடி பணி நிமித்தமாகப் பயணம் செய்தல் மற்றும் தனது தற்போதைய குழுவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு பெரிய குழுவை நிர்வகித்தல் ஆகியவறறை அவர் செய்திருக்க வேண்டும். அவரது வார இறுதி நாட்களும் கணிக்க முடியாததாக மாறியிருக்கும்.

வாரத்திற்கு 4 இரவுகள் அமெரிக்க அணியுடன் தொலைபேசி உரையாடல்கள். அவரால் மறுக்க முடியாத பயணம். கிட்டத்தட்ட இருமடங்கு பெரிய அணி, அதாவது அவரது நாட்கள் அவருக்குச் சொந்தமாக இல்லாமல், வேறு 12 பேருக்குச் சொந்தமாகிவிடுகிறது. வார இறுதி நாட்கள் பெயரளவுக்கு மட்டுமே காலியாக இருந்தாலும், உண்மையில் அவை ஒருபோதும் காலியாக இருக்க போவது இலலை.. அவரும் அவரது மனைவியும் அடுத்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். அவர் வாரத்திற்கு ஐந்து நாட்கள் காலையில் உடற்பயிற்சி செய்கிறார். ஒவ்வொரு புதன்கிழமையும் தனது பெற்றோர் வீட்டில் இரவு உணவு சாப்பிடுகிறார். இதெல்லாம் இனி கிடைக்காமல் போகும் என்று தவாண் தனது பதிவில் கூறியிருந்தார்.

இதனிடையே பலர் இதைவிட மிகச் சிறிய சம்பள உயர்வுக்காகவே வேலையை மாற்றும்போது, ​​கூடுதலாக 20 லட்சம் ரூபாயை ஏன் நிராகரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவரது தந்தைக்கு, இந்த முடிவு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கோபம் அடைந்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட வருமான நிலையை அடைந்த பிறகு, கூடுதல் பணம் என்பது நேரம், உறவுகள் மற்றும் தனிப்பட்ட முன்னுரிமைகளைப் பாதிக்கும் என்றும் தவான் வாதிட்டார். "ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்குப் பிறகு, கூடுதல் லட்சங்கள் நிறுவனத்தின் பையிலிருந்து வருவதை நிறுத்திவிட்டு, உங்களுடைய பையிலிருந்து வரத் தொடங்குகின்றன என்பதை மக்கள் உணர்வதில்லை. அவரது மாலை நேரங்களும், அவரது மனைவி மணந்த அவரது வடிவமும். ஒவ்வொரு பணி நியமனக் கடிதமும் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதைத் துல்லியமாகச் சொல்கிறது," என்று தவான் கூறினார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக அதிக சம்பளம் பெறுவதை விட தொழில் வளர்ச்சியை ஒரு பெரிய விஷயமாகக் கருதும் தொழில் வல்லுநர்கள் மத்தியில் இது பிரபலமாகி உள்ளது.

நெட்டிசன் ஒருவர் கூறும் போது, "கடந்த பிப்ரவரியில் நானும் இதே போன்ற ஒரு காரியத்தைச் செய்தேன். நிலையான சம்பளத்தில் கிட்டத்தட்ட 50% உயர்வும், மொத்த சம்பளத்தில் 80%க்கும் அதிகமான உயர்வும் கொண்ட ஒரு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குக் குழந்தை பிறந்ததால், தற்போதைய டீமிலேயே தொடர முடிவு செய்தேன்." என்றார்.

மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "உண்மையைச் சொல்லப்போனால், இந்த வாய்ப்பை நிராகரிப்பது அவரை மற்றவர்களை விட லட்சியம் குறைந்தவராக ஆக்கிவிடாது. அவருடைய முன்னுரிமைகள் வேறுபட்டவை, மேலும் பல வாய்ப்புகள் நிச்சயமாக வரும்." என்றார்.

மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், "ஒருவரின் வாழ்க்கைச் சுழற்சியில் முன்னுரிமைகள் மாறிக்கொண்டே இருக்கும், அது இயல்பானதுதான். சம்பளம் என்பது அந்த கனசதுரத்தின் ஒரு பரிமாணம் மட்டுமே." என்று உருக்கமாக கூறினார்.

நான்காவது நெட்டிசன் கூறுகையில், "மிகவும் துணிச்சலான, அதே சமயம் விவேகமான முடிவு. வாழ்க்கையில் எல்லாமே பணத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டியதில்லை என்பதைக் கருத்தில் கொண்டால், இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு." என்று அழுத்தமாக கூறினார். மக்களே உங்கள் கருத்து என்ன, நீங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தைவிட டபுள் சம்பளம் என்று கூறி, இதேபோன்ற நிபந்தனை விதித்தால் ஏற்பீர்களா? கமெண்டில் கூறுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+