பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்கள்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர இருக்கிறது. இதனை அக்கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பல வட மாநிலங்களில் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றைத் தொகுதிகளை கூட விட்டுக் கொடுக்காமல் அப்படி வாரி சுருட்டும் நிலையில் உள்ளது. பாஜகவின் வெற்றிக்கு இந்த மாநிலங்களே அடித்தளமிட்டுள்ளன.

கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..! கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!

ஆம் ஆத்மியை ஊதித் தள்ளிய பாஜக

ஆம் ஆத்மியை ஊதித் தள்ளிய பாஜக

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக தன்வசப்படுத்த இருக்கிறது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கிடைக்காத நிலை உள்ளது. அதேபோன்று, குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் நிலை இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்திலும் மொத்தமுள்ள 4 தொகுதிகளும் பாஜகவிற்கே வர இருக்கிறது.

ராஜஸ்தானில் ஆதிக்கம்

ராஜஸ்தானில் ஆதிக்கம்

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் வாய்ப்புள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளையும் கைப்பற்றி எதிர்கட்சிகளை வாஷ் அவுட் ஆக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்தமுள்ள 2 இடங்களையும், மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 28 தொகுதிகளையும் பாஜக தன் வசப்படுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!

உ.பி.யில் விஸ்வரூபம்

உ.பி.யில் விஸ்வரூபம்

நாட்டின் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக அசத்தி இருக்கிறது. பிரதமரையே நிர்ணயிக்கும் சக்தி படைத்த உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 61 தொகுதிகளை பாஜக தன் வசப்படுத்தும் நிலை உள்ளது.

மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மம்தா பானர்ஜியின் சீற்றத்தை மீறி மேற்குவங்கத்திலும் 17 இடங்களில் வெற்றி பெறும் நிலையுடன் அதிர வைத்துள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 38 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

யூனியன் பிரதேசங்களும் பாஜக கைவசம்

யூனியன் பிரதேசங்களும் பாஜக கைவசம்

அந்தமான் நிகோபரிலும் ஒரு தொகுதியும், அருணாச்சல பிரதேசத்தில் 2 தொகுதிகளுமே பாஜகவிற்கு கிடைக்கும் நிலை உள்ளது. அஸ்ஸாமில் 14 இடங்களில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. சண்டிகரும் பாஜக வசமாகிறது.

2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!! 2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!

கர்நாடகாவில் அசத்தல்

கர்நாடகாவில் அசத்தல்

சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. தென்மாநிலங்களில் பாஜகவிற்கு பெரும் பின்னடவை கிடைத்தாலும், கர்நாடகாவில் அசத்தி இருக்கிறது. மொத்தமுள்ள 28 இடங்களில் 24 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று, ஜார்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 11 தொகுதிகளை கைப்பற்ற உள்ளது.

அதிர்ச்சி தந்த தென்மாநிலங்கள்

அதிர்ச்சி தந்த தென்மாநிலங்கள்

தமிழகம், கேரளா, ஆந்திராவை தவிர்த்து பிற அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க இடங்களுடன் பாஜக வலுவான நிலையில் உள்ளது. பெரும்பாலான யூனியன் பிரதேசங்களில் பாஜகவின் கையே ஓங்கி நிற்கிறது. தென்மாநிலங்கள் குறித்து கவலைப்படாமல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்! கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

English summary
Here’s the list of states that have paved the way for Prime Minister Narendra Modi’s retain to power in the 2019 lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X