Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குண்டுவெடிப்புடன் தமிழகத்தை இணைத்த மத்திய அமைச்சர்.. ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு தடை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாட்டில் இருந்து வந்து பெங்களூரில் குண்டு வைப்பதாக பாஜகவின் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசி சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்நிலையில் தான் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஷோபா கரந்தலாஜே நிம்மதியடைந்துள்ளார்.

கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் ஷோபா கரந்தலாஜே. பாஜகவின் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான இவர் உடுப்பி - சிக்கமகளூர் எம்பியாவார். மேலும் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையமைச்சராக உள்ளார்.

Bomb Blast Remark Karnataka High Court stays probe against union Minister Shobha Karandlaje


நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ஷோபா கரந்தலாஜே பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது.

அதாவது ஷோபா கரந்தலாஜே, ‛‛தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து ஓட்டலில் வெடிகுண்டுகள் வைக்கின்றனர். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என தெரிவித்தார். கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடித்த நிலையில் அதனுடன் தமிழகத்தை தொடர்புபடுத்தும் வகையில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

திமுக புகாரால் அதிரடி.. தமிழகம் பற்றிய சர்ச்சை பேச்சால் மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!


ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரி தனது கருத்தை வாபஸ் பெற்றார். மேலும் திமுக அமைப்பு ஆர்எஸ் பாரதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க இ-மெயிலில் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கதேர்தல் ஆணையம் உத்தரவிட்ட. அதனடிப்படையில் ஷோபா கரந்தலாஜே மீது பெங்களூர் காட்டன்பேட்டை போலீசார் வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மதுரை போலீஸ் நிலையத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தன்மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன். பிரசாரம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவரது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது இன்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்சீத் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மத்திய அமைச்சராக பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு இதுபோன்ற வார்த்தைகள் சரியானதாக இருக்காது எனக்கூறி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இதன்மூலம் ஷோபா கரந்தலாஜே நிம்மதியடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+