புர்கா அணிந்து கொண்டு டான்ஸ் ஆடுவது தவறு.. கர்நாடக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பால் பணிந்த விழா குழு
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனை எழுந்ததன் தொடர்ச்சியாக குடகு மாவட்டத்தில் நடந்த கலாசார நிகழ்வு ஒன்றில் சில இளைஞர்கள் புர்கா உடை அணிந்து பாடலுக்கு நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குழு மன்னிப்பு கோரியுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்கு கொலகேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராம வளர்ச்சி குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் உள்ளனர்.
இந்த குழு சார்பில் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வைரவிழா நிகழ்ச்சி
இந்நிலையில் மேற்கு கொளகேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம வளர்ச்சி குழுவின் வைரவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 28, 29 ஆகிய தேதிகளில் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது பாடல்களுக்கு சிறுவர், சிறுமிகள் நடனமாடினர்.

புர்கா அணிந்து நடனம்
அப்போது இளைஞர்கள் சார்பில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடப்பட்டது. கொடவா வாலகா இசையிலான ஒரு பாடலுக்கு சிலர் புர்கா அணிந்து நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் புர்கா அணிந்து நடனமாடிய விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

முஸ்லிம்கள் எதிர்ப்பு
அதாவது புர்கா அணிந்து நடனமாடியது இஸ்லாம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கிராமத்தில் வசிக்கும் சிலரும் கண்டனமும் தெரிவித்தனர். இதுபற்றி எஸ்டிபிஐ கட்சியின் கர்நாடக மாநில பொதுச்செயலாளர் அப்சார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛கொலகேரி கிராமத்தில் நடந்த விழாவில் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் புர்கா ஆடை அணிந்து மோசமாக சிலர் நடனமாடி உள்ளனர். இவர்கள் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என குடகு மாவட்ட எஸ்பிக்கு கோரிக்கை வைத்து இருந்தார்.

மன்னிப்பு கோரிய குழு
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். கிராம வளர்ச்சி குழு தலைவர் கே முத்தையா கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக தான் சில குழந்தைகள் புர்கா அணிந்து நடனமாடினர். இதன் பின்னணியில் குறிப்பிட்ட மதத்தின் உணர்வை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. எங்கள் கிராம மக்கள் மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். தற்போதைய நிகழ்வு யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம்'' என்றார்.
|
தொடரும் சர்ச்சை
கர்நாடகத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் மதம் சார்ந்து பல்வேறு விஷயங்கள் சர்ச்சையாகி வருகின்றன. ஹிஜாப் தடை, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு, இந்து வியாபாரிகளிடம் மட்டுமே பொருட்கள் வாங்குவது, மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை செய்வது உள்பட பல்வேறு விஷயங்களை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் சர்ச்சைகளை கிளம்பினர். இந்நிலையில் தான் கலாசார நிகழ்ச்சியில் புர்கா அணிந்து நடனமாடியதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் புதிய சர்ச்சையாக உருவாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications