“தமிழில் பேசுவியா? கேட்டு.. கேட்டு அடித்தார்கள்!” பெங்களூரில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ராம்புரா பகுதியில் லோடு இறக்க சென்ற தமிழர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே காவிரி நீர் விவகாரத்தில், கன்னட அமைப்புகள் தமிழகத்திற்கு எதிராக திரும்பியிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இரு மாநிலத்திற்கு இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

பெங்களூர் ராம்புரா பகுதியில் டைல்ஸ் லோடு இறக்க சென்ற தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.

Tamil Youth Beaten in Bengaluru

"நாங்கள் ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் என பல மாநிலங்களுக்கு போயிருக்கிறோம். ஆனால், கர்நாடகாவில் வந்து இந்த டைல்ஸ் லோடு இறக்குவதற்குள் எனக்கு செத்துப்போய்விடலாமா என்று தோன்றியது. ராம்புரா பகுதியில் லோடு இறக்க சென்றபோது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. எனவே பக்கத்தில் இருந்த காலி கிரவுண்டில் வண்டியை நிறுத்திவிட்டு அடுத்த நாளுக்காக காத்திருந்தோம். மறுநாள் அழைப்பு வந்தது.. அங்கு போனால் ஆள் இல்லை.

இதற்கிடையில் சிலர் கும்பலாக வந்து எங்களை ஆபாசமாக திட்டி, சரமாரியாக தாக்கினர். வாயை உடைத்தனர்.. தண்ணீர் எல்லாம் தர முடியாது.. தமிழில் பேசுவியா? என கேட்டு கேட்டு அடித்தனர். உங்கள் ஊர் மக்களுக்காக நாங்கள் லோடு தானே கொண்டு வந்து கொடுத்தோம்? வேறு என்ன செய்தோம்? இந்த சம்பவத்திற்கு பிறகு எப்போது வெளியே செல்வோம் என்று சங்கடமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார்.

காவிரி பிரச்சனை

தமிழகத்திற்கு போதிய அளவுக்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்றும்.. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தியும் கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இன்று பந்த் போராட்டத்தை அறிவித்திருந்தன. ஆனால், பந்த் எதிர்ப்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. பந்த் பிசுபிசுத்தது. இருந்தும், தமிழர்களை குறி வைத்து சிலர் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

வறட்சியில் மேட்டூர்

இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடாக மறுத்துள்ளது. ஆனால், கர்நாடகாவின் காவிரியின் கிளை ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இருக்கிறது. 60% அளவு தண்ணீர் இருந்தும் கூட.. கர்நாடகா திறந்துவிட மறுத்து வருகிறது.

டெல்டாவின் நிலை

இதனால் மேட்டூருக்கான நீர் வரத்து குறைந்து.. போதுமான நீர் இல்லாமல் அணை வறட்சியடைந்திருக்கிறது. மேட்டூர் திறக்கப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை என காவிரியின் கடைமடை மாவட்டங்களில் விவசாயம் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவின் பிடிவாதம்

இதையெல்லாம் புரிந்துக்கொள்ளாமல், போதுமான அளவு நீர் வைத்திருந்தும் அதை திறக்காமல் கர்நாடாக அடம்பிடித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. அம்மாநில அரசு நீரை திறக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, மறுபுறம் கன்னட அமைப்புகளின் போராட்டங்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+