அப்பாடா.. 100 அடியை கடந்து மெல்ல உயரும் கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! இன்றைய நிலவரம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா-தமிழ்நாடு இடையே காவிரி பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் கர்நாடகாவில் அமைந்துள்ள காவிரி அணையின் நீர்மட்டம் என்பது மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று 100 அடியை கடந்த நிலையில் இன்று அணைக்கான நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அக்டோபர் 15ம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பந்த், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணைக்கு வாகனங்களில் ஊர்வலம் சென்றனர். தமிழகத்தக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக கர்நாடகா அரசு நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் காவிரிக்கு முக்கிய நீர்ஆதாரமாக உள்ள கேஆர்எஸ் அணை நீர்மட்டம் குறித்த விஷயத்தில் கர்நாடகா அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் தான் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 3 நாட்களாக கேஆர்எஸ் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து 100.36 அடியாக இருந்தது. மொத்தம் 124.8 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தான் இன்று கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100.82 அடியாக அதிகரித்து இருந்தது. நேற்றைய தினம் அணைக்கு உள்ளே வினாடிக்கு 9,052 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று அதன் அளவு என்பது குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது தான் இதற்கு காரணமாகும். அதன்படி இன்று கேஆர்எஸ் அணைக்கு உள்ளே வினாடிக்கு 5,842 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,489 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது
கேஆர்எஸ் அணை முழுவதுமாக 124.80 அடியை தொட்டால் அணையில் 49.452 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். தற்போது நீர்மட்டத்தை பொறுத்தமட்டில் அணையில் 23.095 டிஎம்சிக்கும் அதிகமாக தண்ணீர் இருக்கிறது. மேலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் இன்னொரு முக்கிய அணையான கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணையின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது. கர்நாடகா-காவிரி இடையேயான மோதலுக்கு நடுவே இந்த அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருவது ஓரளவு ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications