Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலவுக்கு செல்லும் ரோபோட்! மேற்பரப்பில் துளையிட்டு ஆய்வு..சந்திரயான் 4.. அசர வைக்கும் பிளானில் இஸ்ரோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சந்திரயான் 4 திட்டத்தை வரும் 2025-ம் ஆண்டு பிற்பகுதியில் செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. ஜப்பானுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்திரயான் 4 விண்கலம் செய்யப்போகும் ஆய்வுகள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

நாம் வாழும் இந்த பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது... அங்கு மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா முன்னிலை வகிக்கிறது. சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவிய சந்திரயான் 1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.

Chandrayaan 4: ISRO joined hands with Japan to moon exploration plans

நிலவு குறித்த ஆராய்ச்சியில் பெரும் திருப்பு முனையாக இது அமைந்தது. அதன்பிறகு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த திட்டம் லேசான சறுக்கலை சந்தித்தது. எனினும் இதில் இருந்து பாடம் கற்ற இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. நிலவில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்த விண்கலத்தை இந்தியா அனுப்பியது.

சந்திரயான் 4 திட்டம்: விண்வெளிதுறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் சாதித்து வருகிறது. நிலவில் தண்ணீர் இருப்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோதான் வெளிக்கொண்டு வந்தது. தொடர்ந்து சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

அண்மையில், சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலத்தை இறக்கி ஆய்வு மேற்கொண்டது. அதேபோல் தற்போது சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ ஆதித்யாஎல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது.

லூபெக்ஸ்: இதனிடையே சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. 'லூபெக்ஸ்' என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் 'ரோபோட்' எந்திரங்களை நிலவிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவும் ஜப்பானும் இணைந்து எந்திர ரோபோட்டிக் தொழில்நுட்ப ரோவர் மற்றும் லேண்டரை சந்திரனுக்கு அனுப்பும் திட்டம்தான் லூபெக்ஸ் ஆகும். சந்திராயன்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து பல்வேறு அரிய தரவுகளை வெளியிட்டது.

சந்திரயான் திட்டத்தின் அடுத்த கட்ட செயல்படாக 'லூபெக்ஸ்' இருக்கும் என விஞ்னானிகள் தரப்பில் கூறப்படுகிறது. முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டம் தயாராகி வருகிறது. . 'லூபெக்ஸ்' திட்டத்தில் உள்ள லேண்டரை இந்தியாவும் ரோவர் ஜப்பானும் உருவாக்கி வருகிறது.

நிலவில் துளையிட்டு ஆய்வு: 'லூபெக்ஸ்' திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவருக்கு ஆயுட்காலம் 6 மாதங்களாகும். லுபெக்ஸ் திட்டத்தில் பொருத்தப்பட உள்ள லேண்டர் மற்றும் ரோவரின் எடை 350 கிலோவாக இருக்கும். . நிலவின் மேற்பரப்பில் துளையிடக் கூடிய எந்திர கைகள்" ரோவரில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

நிலவில் துளையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் படிமங்களையும், நீர் மூலக்கூறுகளையும் சேகரித்து ஆய்வு மேற்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. வரும் 2025-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+