பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெல்லாரி: மன அழுத்தம் போக உற்சாக நடனமாடிய கொரேனா நோயாளிகள் - வைரல் வீடியோ

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து குத்தாட்டம் போட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கோவிட் 19 முகாமில் இந்த சம்பவம் நடைபெற்றுள்

Google Oneindia Tamil News

பெல்லாரி: கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சகோதரியை நடனமாடி வரவேற்ற பெண்ணின் வீடியோ வைரலான நிலையில் கொரோனா சிகிச்சை முகாமில் உள்ள நோயாளிகள் பலரும் நடனமாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா முகாமில் சிலர் கபடி ஆடினார்கள், கிரிக்கெட் விளையாடினார்கள். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமில் குத்தாட்டம் போட்டு மன அழுத்தத்தை போக்கிக்கொண்டுள்ளனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் பலரும் முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தும் கன்னட, இந்தி பாடல்களுக்கு அவர்கள் அழகாக நடனமாடினர். இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துவது போல இருந்தது.

Corona positive patients do a flash mob inside #covid19 care centre

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பல லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் பலர் மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். சிலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் ஏற்படும் மன உளைச்சலை போக்க சில முயற்சிகளை மருத்துவர்கள் செய்கின்றனர்.

ஒரே நாள்.. அடுத்தடுத்த 2 வேக்சின் அறிவிப்பு.. ஆக்ஸ்போர்டிற்கு போட்டியாக வந்த சீன நிறுவனம்.. அதிரடிஒரே நாள்.. அடுத்தடுத்த 2 வேக்சின் அறிவிப்பு.. ஆக்ஸ்போர்டிற்கு போட்டியாக வந்த சீன நிறுவனம்.. அதிரடி

நோய் வந்து விட்டாலே அவர்களை எப்படி குணபடுத்த வேண்டும் என்றுதான் பார்க்கவேண்டும் அவர்களுக்கு தன்னம்பிக்கையை தர வேண்டும் என்று வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்த கமல்ஹாசன் சொல்லியிருப்பார். நோயாளிகளை அவர் குணப்படுத்தும் விதமே அலாதியானது. அவ்வப்போது குத்தாட்டமும் இருக்கும். அப்படித்தான் பெல்லாரியில் கொரோனா சிகிச்சை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சிலர் குழுவாக இணைந்து நேற்று மருத்துவமனை வளாகத்தில் திரண்டு 'பிளாஸ் மாப்' எனப்படும் எதிர்பாராத ஆடல் பாடல் நடனத்தில் ஈடுபட்டனர்.

Recommended Video

    Bangalore உட்பட karnataka முழுக்க ஊரடங்கு கிடையாது.. எடியூரப்பா அதிரடி

    இந்த நடனத்தினை அங்கிருந்த காவலர்கள், மருத்துவர்களும் கண்டு ரசித்தனர். முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தும் கன்னட, இந்தி பாடல்களுக்கு அவர்கள் அழகாக நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Corona positive asymptomatic patients do a flash mob inside #covid19 care centre. Patients include doctors, police, and general public in Bellary
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X