கர்நாடகாவையும் புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல் தாக்கம்: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு லீவ்!
பெங்களூர்: வங்க கடலில் நிலை கொண்டு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை புரட்டி எடுத்துவிட்டு கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைந்தது. இதனால் பெங்களூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டியது. தற்போது அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கும் பெஞ்சல் புயலால் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது பெஞ்சல் புயல். இந்த புயல் வங்க கடலில் பெரும் கண்ணாமூச்சி ஆட்டத்தையே ஆட்டிக் காட்டிவிட்டது. முதலில் புயல் வலுவிழந்தது; பின்னர் திடீரென புயலானது; ஒரு கட்டத்தில் பல மணிநேரம் நகராமல் நிலை கொண்டிருந்தது; பின்னர் புயல் கடக்கப் போகும் பாதை குறித்து தெளிவற்ற நிலை உருவானது.

இத்தகைய போக்கு காட்டிய பெஞ்சல் புயல் ஒருவழியாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆனால் கரையைக் கடந்தும் வலுவிழக்காமல் வட தமிழ்நாட்டின் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மையம் கொண்டு பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செமீ மழையை கொட்டித் தீர்த்துவிட்டது இந்த பெஞ்சல் புயல்.
இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கின. அத்தனை அணைகளும் நிரம்ப, உபரி நீர் பெருமளவு திறந்துவிட ஆறுகளின் கரைகளை தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் விழுப்புரம் மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை- திருச்சி இடையே ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் கேரளாவின் வயநாட்டை நினைவுபடுத்தும் வகையில் பயங்கர நிலச்சரிவும் நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிருடன் புதையுண்டு போயினர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்ற பெஞ்சல் புயல் வலுவிழந்த நிலையில் கர்நாடகாவின் பெங்களூர் வழியாக அரபிக் கடல் நோக்கிச் சென்றது. தற்போது அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருக்கிறது இந்த பெஞ்சல் புயல். இப்புயலின் தாக்கத்தால் பெங்களூரில் நேற்று கனமழை கொட்டியது. கர்நாடகாவின் பல மாவட்டங்களிலும் பெருமழை கொட்டியது. இன்றும் கர்நாடகாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications