தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு அமித் ஷா அடிமைகளாக மாறாதீர்கள்.. பாஜகவினருக்கு சித்தராமையா குட்டு
பெங்களூர்: தேசிய மொழி இந்தி என்பதற்கு தமிழகம், கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் சித்தாராமையா பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதன்படி இன்று பாஜகவை கடுமையாக தாக்கி பேசியுள்ள சித்தராமையா, இந்தி மொழி விவகாரத்தில் அமித்ஷாவின் அடிமைகளாக மாற வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் ‛விக்ரம் ராணா' படவிழாவில் ‛‛இந்தி தேசிய மொழி கிடையாது'' என கூறியிருந்தார். இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுபற்றி அஜய் தேவ்கன் இந்தி மொழியில் தனது டுவிட்டரில், ‛‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

சுதீப் பதிலடி
இதற்கு கிச்சா சதீப், "என்னுடைய பேச்சின் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படி சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்றார். மேலும், இன்னொரு பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.

கர்நாடகத்தில் கிளம்பிய எதிர்ப்பு
இந்த கருத்து மாற்றம் தற்போது இந்திய அளவில் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு அஜய் தேவ்கனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கன்னட மக்கள் இந்திக்கு எதிராக பதிவுகள் செய்து வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதல்வர்களாக சித்தராமையா, குமாரசாமி ஆகியோரும் இந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கு நடிகர் அஜய் தேவ்கனை கடுமையாக சாடியுள்ளனர்.

பாஜகவினர் ஆதரவு
இதற்கிடையே கர்நாடகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் இந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடக அமைச்சர்களான முருகேஷ் நிராணி, அஸ்வத் நாராயண், முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி, தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் இந்தி மொழிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவருமான சித்தராமையா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

மொழி அரசியலில் பாஜக
மத அரசியலை முன்னெடுத்த பாஜக தலைவர்கள் இப்போது மொழி அரசியலில் கைக்கோர்த்து உள்ளனர். இத்தகைய சுய லாப அரசியல் செய்யும் நபர்களுக்கு சுயமரியாதை கொண்ட கன்னடர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். கன்னடம் என்பது நமக்கு அரசியல் ஆயுதம் அல்ல. இது நம் வாழ்வின் மூச்சு. இதனால் கன்னடத்தை விட்டு கொடுக்க கூடாது.

தாய்மொழிக்கு தான் முதல் மரியாதை
அதே நேரத்தில் ஆங்கிலம், இந்தி உள்பட அனைத்து மொழிகள் மீதும் மரியாதை உண்டு. ஆனாலும் கன்னடத்துக்கு தான் முன்னுரிமை. காரணம் தாய்மொழிக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். நமது நாடு கூட்டாட்சி தத்துவத்தை கொண்டது. மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னடம் தான் எனக்கு தாய்மொழியாகும்.

துரோகிகள்
இந்தி நமது தேசிய மொழி அல்ல. ஒவ்வொரு மாநில மொழியும் நமது நாட்டின் தேசிய மொழி. இதுபற்றி அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பை எதிர்க்கும் துரோகிகளுக்கு இதுபற்றிய அறிவு வேண்டும். தேசிய மொழி என்பது கன்னட மொழியை சிதைத்து விடும். இதனால் எச்சரிக்கை வேண்டும்.

அமித்ஷாவின் அடிமைகளாக...
சிடி ரவி, முருகேஷ் நிராணி, ரமேஷ் ஜிகஜினகி உள்ளிட்டவர்கள் இந்தி மொழிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இவர்களுக்கு இந்தி மொழி மீது நேசம் கிடையாது. ஆனாலும் டெல்லியில் உள்ள கட்சி தலைவர்களை கவர்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அதனால் தான் மத்திய உள்துறை அமைச்சர் இந்திக்கு ஆதரவாக பேசியவுடன் அவரை கவரும் வகையில் கர்நாடக பாஜக தலைவர்கள் வரிசை கட்டி பேசினர். பாஜகவினர் அமித்ஷாவின் அடிமைகளாக மாறாமல் கன்னட தாயின் பிள்ளைகளாக இருக்க வேண்டும்.

கன்னடர்கள் எதிர்க்க வேண்டும்
நான் கன்னட மொழி கண்காணிப்பு குழுவின் முதல் தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். நான் இன்றும், எப்போதும் கன்னட மொழி காவலனாகவே இருப்பேன். நாட்டில் உள்ள பன்முகத்தன்மை, பல்வேறு கலாசாரம், மொழிகளை காங்கிரஸ் ஏற்று கொண்டது. ஆனால் பாஜக ஒரு மதம், ஒரு மொழி கலாசாரம் என மக்களுக்கு எதிராக உள்ளது. அதை மக்களிடம் திணிக்கவும் செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கன்னட மொழியை புறம்தள்ளிவிட்டு இந்தியை திணிக்க முயலும் பாஜக தலைவர்களின் தந்திர அரசியலை சுயமரியாதை கொண்ட கன்னடர்கள் எதிர்க்க வேண்டும்.
Recommended Video

சரியான பதிலடி கொடுக்க வேண்டும்
கன்னட படங்கள், பாலிவுட் படங்களுக்கு நிகராக தற்போது வெற்றி பெறுகின்றன. இதை பொறுத்து கொள்ள முடியாத இந்தி நடிகர்கள் கன்னட மொழிக்கு எதிராக சதி செய்கின்றனர். இதற்கு கன்னட திரையுலகம் தான் ஒன்றுபட்டு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications