பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்டிய தனிமை.. பெண்ணுக்கு வயது 64.. மாப்பிள்ளைக்கு 75.. அப்பாவை நெகிழ வைத்த மகள்கள்.. ஆஹா கல்யாணம்!

75 வயது அப்பாவுக்கு 2வது திருமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: தனிமையில் தவித்து கிடக்கும் தன் அப்பாவுக்கு, 2வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளனர், அவரது மகள்கள்.. என்ன நடந்தது?

தற்போதைய நவீன காலகட்டத்தில், காதல் என்ற வலிமையான உணர்வையே, மலிவாக்கி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.. அதேபோல, தூய்மையான காதலே என்றாலும், அது தோல்வியாகும்பட்சத்தில், ஒரு காதல் தோற்றுப்போனால், இன்னொரு காதல் மலர்வது இயல்பாகிவிட்டது.

இந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது என்றாலும், நம் சமூகத்தில் இன்னும் சில கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு தான் வருகின்றன... எழுதப்படாத விதிமுறைகளும் நிலுவையில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

மஞ்சள் அலர்ட்.. மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் பெங்களூரு?... வெளுத்து வாங்கிய மழை.. அவதியில் மக்கள்மஞ்சள் அலர்ட்.. மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் பெங்களூரு?... வெளுத்து வாங்கிய மழை.. அவதியில் மக்கள்

 தனிமை

தனிமை

அந்த வகையில் திருமணமாகி, கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது.. என்னதான் நாகரீகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் பேசினாலும், கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்களுக்கு, இன்னொரு திருமணத்தை இந்த சமூகம் முழுமையாக அங்கீகரிப்பதில்லை.. அந்த பெண்ணின் உணர்வுகளையும் மதிக்காமல், அவரது குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிந்திக்காமல், கண்டும் காணாமல் விலகி செல்லும் போக்கு இன்றும் உள்ளது..

 தனிமை கோலம்

தனிமை கோலம்

அதேபோல, சம்பந்தப்பட்ட பெண்களும், இன்னொரு மறுமணம் செய்தால், இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்பதற்காகவும் மறுமணம் செய்து கொள்வதில்லை... இதுபோல் லட்சக்கணக்கான இளம்வயது பெண்கள், நாலு சுவர்களுக்குள்ளேயே தங்கள் வாழ்நாளை கழித்து, இறந்து போகும் அவலமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. எனினும் ஆங்காங்கே இந்த நிலைமை மாறி வருகிறது.. அதிலும் இளைய சமுதாயம், புது சிந்தனையுடன் வளர தொடங்கிவிட்டார்கள்.. தாயின் மகன் மற்றும் மகள்களிடையே இந்த மாறுதல்கள் ஏற்பட துவங்கிவிட்டது..

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

சமீபத்தில் கூட, ஒரு மகள், தன்னுடைய தாய்க்காக வரன் தேடிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல, 59 வயது தாய்க்கு, அவரது மகள் இன்னொரு திருமணம் செய்து வைத்த நிகழ்வும் இதே கேரளாவில்தான் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.. இதோ இப்போதும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.. ஹூப்பள்ளி நகரில் அரவிந்த் நகரில் வசித்து வருபவர் டி கே சௌஹான்.. 75 வயதாகிறது.. இவர் மிகப்பெரிய தொழிலதிபரும்கூட..

பிசினஸ்மேன்

பிசினஸ்மேன்

2018ம் ஆண்டு ஹூப்பள்ளி நகரின் மேயராக இருந்திருக்கிறார்.. மேலும், தன்னுடைய பகுதியில் 3 முறை தொடர்ந்து கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.. 4 பெண்களுக்கு கல்யாணமாகிவிட்டது.. சௌஹானுக்கு பத்துக்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் என மொத்தம் 27 நபர்கள் ஒரே வீட்டில் கூட்டு குடித்தனமாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சௌகானின் மனைவி சாரதா பாய், மாரடைப்பால் இறந்துவிட்டார்.

 பெண்ணுக்கு வயது 64

பெண்ணுக்கு வயது 64

மனைவியின் மீது உயிரையே வைத்திருந்த சௌஹான், மனம் நொறுங்கி போய்விட்டார்.. மனைவியின் பிரிவில் இருந்து அவரால் மீண்டு வரவே முடியவில்லை.. இதைப்பார்த்து கவலைப்பட்ட அவரது மகள்கள், அப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.. இதற்காக, தங்களின் பெரியம்மா, அதாவது சாரதாவின் சொந்த அக்கா அனுசுயாவை திருமணம் செய்துவைக்க முடிவு செய்து அவரிடம் பேசினார்கள்.. அனுசுயாவுக்கு 64 வயதாகிறது..

கோலாகலம்

கோலாகலம்

அனுசுயா நீண்ட காலமாகவே திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. வேறு யாரையோ திருமணம் செய்து வைப்பதைவிட, சொந்த பெரியம்மாவையே அப்பாவுக்கு திருமணம் செய்ய மகள்கள் முடிவெடுத்தனர்.. இந்த கல்யாணத்துக்கு அனுசுயாவும் சம்மதித்தார்.. அதன்படி, 3 நாட்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்துள்ளது.. 16, 17 என 2 நாட்களும் இந்த திருமணத்தை பிள்ளைகள் கோலாகலமாக நடத்தி வைத்து அசத்தி விட்டார்கள்.

 கழண்டு விழுந்தன

கழண்டு விழுந்தன

தனிமனித உணர்வுகளையும், உறவுகளுடனான மகத்துவத்தையும், இன்றைய இளைய சமுதாயம் புரிந்து வைத்திருப்பது வியப்பை தந்து வருகிறது.. இவர்களின் சிந்தனை விரிவடைந்து வருகிறது. இவர்களின் இதயம் விசாலமாகி வருகிறது.. இந்த விசால மனப்பான்மை பெருக, பெருக, தனிமையில் தவிக்கும் ஆண் - பெண்களின், "கலக்க + தயக்க சங்கிலிகள்" நொறுங்கி கழண்டு விழ தொடங்கிவிட்டன..!

English summary
excellent job done and Daughters married to 75 year old father in Karnataka Bangaluru
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X