ஆட்டுக்கறி + சப்பாத்தி.. ருசித்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சப்பாத்தியுடன் மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலியாகி உள்ளனர். இதுபற்றிய விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாலுகா கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமண்ணா (வயது 60). இவரது மனைவி பெயர் ஈரம்மா (57). இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர்.

karnataka bangalore

இதில் மூத்த மகள் பெயர் மல்லம்மா (23), இளையமகள் பெயர் பார்வதி (19), மகன் பெயர் மல்லேஷ் (21). இந்நிலையில் தான் கடந்த 31ம் தேதி இரவு பீமண்ணா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சப்பாத்தி + மட்டன் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு தூங்கியுள்ளார்.

இந்த வேளையில் அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு சிராவாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு ராய்ச்சூர் அரசு ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 4 பேர் பலியாகினர்.

இதுதான் பாசம்.. 250 கிமீ தொலைவை கடந்து வளர்த்தவரை தேடிவந்த நாய்.. நெகிழ வைத்த சம்பவம்


பீமண்ணா, ஈரம்மா, மல்லேஷ், பார்வதி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். மூத்த மகள் மல்லம்மா சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவரது உடல்நிலை என்பது மோசமான நிலையில் தான் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? என்பது பற்றிய விசாரணை தொடங்கியது. . முதற்கட்டமாக போலீசார் அவர்களின் வீட்டுக்கு சென்று அவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.


இதுபற்றி ராய்ச்சூர் எஸ்பி புட்ட மாதய்யா கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதன்கிழமை இரவு உணவை சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு வாந்தி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். மறுநாள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் பீமண்ணா இறந்தார். அதன்பிறகு மற்றவர்கள் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தனர். இயற்கைக்கு மாறான சாவு என்று சிரவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் இறப்புக்கான காரணம் என்பது உணவு பரிசோதனையின் ரிசல்ட் வந்த பிறகு தான் தெரியும்’’ என்றார்.

நெற்றியில் பொசுக்னு குங்குமம் வெச்சிட்டாரே? ஓஹோ அந்த அமைச்சரா? யாரிந்த பெண் பிரபலம்? பாஜக பார்க்குதே


அதேபோல் ராய்ச்சூர் கலெக்டர் நிதிஷ் கூறுகையில், ‛‛முதற்கட்ட விசாரணையில் பீமண்ணா குடும்பத்தினர் சப்பாத்தி, மட்டன் மற்றும் காய்கறி சாப்பிட்டுள்ளனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நச்சுப்பொருள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார். இதற்கிடையே தான் பீமண்ணா குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றாரா? இல்லாவிட்டால் அவர்கள் சாப்பிட்ட மட்டன் கெட்டுப்போய் இருந்ததா? அல்லது உணவே விஷமாக (ஃபுட் பாய்சன்) மாறிவிட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+