இலவசம்.. உலகில் எங்கிருந்தாலும் இணைய வழியில் வீட்டில் இருந்தே தமிழ் கற்கலாம்! விண்ணப்பிக்க வாய்ப்பு
பெங்களூர்: உலகில் எங்கிருந்தாலும் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் இலவசமாக தமிழ் கற்கும் வாய்ப்பை தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பிறந்த பலரும் தொழில் சார்ந்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தான் ‛தமிழ் அறக்கட்டளை பெங்களூரு'அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதாவது தமிழ் அறக்கட்டளை பெங்களூர் சார்பில் இலவசமாக தமிழ் வகுப்புகள் இணைய வழியில் சொல்லி கொடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தமிழ் அறக்கட்டளை பெங்களூர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‛‛உலகின் பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இந்த குறையை போக்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை தமிழ் அறக்கட்டளை பெங்களூர் வழங்குகிறது.
எழுத்துக்கள், சொற்கள், வார்த்தைகள், உரையாடல்கள், இலக்கணம் ஆகிய 5 படிநிலைகளை கொண்ட அடிப்படைத் தமிழ் பயிற்சி வகுப்புகள் 5 மாதங்கள் கொண்டதாகும். ஒவ்வொரு படிநிலையில் ஒரு மாதகாலத்திற்கு நடத்தப்படுகிறது. தற்போது 4 படிநிலைகளுக்கான வகுப்புகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும்.
செப்டம்பர் மாதத்திற்கான வகுப்புகள் நாளை மறுநாள் (செப்டம்பர் 1) துவங்க உள்ளது. இதில் சேர்ந்து விரும்பும் மாணவர்களிடம் இருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://forms.gle/uHAD3tDgLJFaiHvdA என்ற கூகிள்ஃபார்ம் இணையப்படிவத்தில் விண்ணப்பங்களை நிரப்பி செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31ம் (நாளை) தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வகுப்புகளில் சேரலாம்.
பாடங்கள் தமிழ் வழியில் கற்பிக்கப்படும். தமிழ்ப் பயிற்சிப்பாடம் தவிர, திருக்குறள் மற்றும் அது தொடர்பான கதை, நாப்பிழற்பயிற்சி, அறநெறிப் பாடல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. திங்கள்முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் நடக்கும். சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். கூடுதல் விவரங்களுக்கு என்ற செல்லிடப்பேசி எண்கள், [email protected] என்ற மெயிலை தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications