ஹிஜாப், ஹலால் இப்போ.. மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்படுத்த கர்நாடக வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் தடை, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடை அமைக்க எதிர்ப்பு, ஹலால் உணவு பிரச்சனை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து இந்து கோவில்களில் முஸ்லிம்கள் கடைகள் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு ஹலால் உணவு பிரச்சனை வெடித்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக கர்நாடகத்தில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையிலான பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு நடுவே தான் தற்போது மசூதிகளில் ஒலிபெருக்கி(ஸ்பீக்கர்) பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒலிபெருக்கிக்கு எதிர்ப்பு
அதாவது மசூதிகளுக்கு போட்டியாக ‛ஓம் நமச்சிவாயா, ஜெய் ஸ்ரீராம்' மந்திரங்கள், அனுமன் பாடல்களை ஒலிக்க செய்ய சில இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு எதிராக பெங்களூர் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பிரசாரம் துவங்கப்பட உள்ளதாகவும், இது மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் பஜ்ரங்தள அமைப்பின் பரத்செட்டி கூறியுள்ளார்.
மேலும் பிரமோத் முத்தாலிக் தலைமையிலான ஸ்ரீராமசேனை அமைப்பினர் பெலகாவி மாவட்டத்தில் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு செய்துள்ளனர். அதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி மசூதிகளில் காலை 5 மணிக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், அந்த அமைப்பினர் சார்பில் கோவில்களில் போட்டி போட்டு சாமி பாடல்களை இசைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசாருக்கு உத்தரவு
இதனால் மாநிலம் முழுவதும் கண்காணித்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில அரசு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அமைப்பினரிடம் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு முதலிலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை
இதுகுறித்து பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், ‛‛முஸ்லிம்களின் தொழுகைக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை. ஆனால் இதேபோன்று இந்து கோவில்கள், கிறிஸ்தவ சர்ச்களில் ஸ்பீக்கள் மூலம் பிரார்த்தனை நடத்தினால் அது இருசமூகங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதுபற்றி இன்னொரு அமைச்சர் அஸ்வத் நாராயண் கூறுகையில், ‛‛கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இந்த விஷயத்தில் ஒரு தலைபட்சமாக அரசு செயல்படாது. சட்ட விதிமுறைகள் படி தான் அரசு செயல்படும்'' என்றார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‛‛ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதுபற்றி மக்களிடம் எடுத்து கூறி புரிய வைக்கப்படும் '' என்றார். கர்நாடகத்தில் கடந்த ஆண்டு அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் ஒலிபெருக்கி பயன்படுத்துவதில் அம்மாநில உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதை தான் பசவராஜ் பொம்மை மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.

மீறுவோர் மீது நடவடிக்கை
இதுபற்றி இன்று பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுகையில், ‛‛கோவில், மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள டெசிபல் அளவுகள் உள்பட உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு வழங்கி, நோட்டீஸ் கொடுத்து வருகிறோம். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications