ஹிஜாப் தடை: கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
பெங்களூர்: ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் மனுக்கள் மீது அடுத்தவாரம் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறைகளாகின. பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதலில் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன்பிறகு அப்போதைய தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது. 11 நாள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர்.

மனுக்கள் தள்ளுபடி
ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசு பிப்ரவரி 5ல் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதையடுத்து 6 மாணவிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இறுதித்தேர்வுகள் நடைபெற உள்ளதால் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மாணவிகளின் தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் தலைமை நீதிபதி என்வி ரமணா ‛‛எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஹோலி விடுப்புக்கு பிறகு பார்க்கலாம். தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை உணர்ச்சிபூர்வமாக்க வேண்டாம் '' என கூறினார்.

அடுத்தவாரம் விசாரணை
இந்நிலையில் தான் ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நினைவுப்படுத்திய நிலையில் தலைமை நீதிபதி என்வி ரமணா, அடுத்த வாரம் பொருத்தமான அமர்வு முன்பு விசாரணை நடத்தப்படும் என கூறினார். இதன்மூலம் மனுக்கள் மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவிகள் தேர்வு புறக்கணிப்பு
முன்னதாக மார்ச், ஏப்ரல் மாதத்தில் கர்நாடகத்தில் பியூ மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. ஹிஜாப் தடையால் ஏராளமான மாணவிகள் தேர்வை புறக்கணித்து சென்றனர். மேலும் மாணவிகளை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications